நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. நடிகர்கள் சூர்யா, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி, மதன் பாபு, ராதாரவி, தேவயானி உள்ளிட்ட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
குறிப்பாக ஒரு காட்சியில் மதன் பாபு தரையில் வழுக்கிய படியே வந்து ஒரு இரும்பு ட்ரம்மை வடிவேலு மீது கவுத்தி விடுவார். அதிலிருந்து கருப்பு நிற பொடி வடிவேலு மீது கொட்டி ஒட்டிக் கொள்ளும். அட்டக் கறியாக மாறிவிடுவார் வடிவேலு.
அதனை பார்த்த அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். இந்த காட்சி குறித்தும்.. இந்த காட்சி படமாக்கப்பட்ட விதம் குறித்தும்.. மதன் பாபு சில விஷயங்களை பதிவு செய்திருக்கிறார்.
அந்த காட்சியில் நான் தரையில் வழுக்கி கொண்டு வரும் பொழுது நான் மட்டும்தான் வருவேன். வேறு யாரும் அங்கு இருக்க மாட்டார்கள். அதன் பிறகு வேறு ஒருவரின் காலை வைத்து தான் வடிவேலுவை எட்டி உதைப்பது போல படமாக்கப்பட்டது.
தேவயானி சிரிப்பார் அது தனியாக படமாக்கப்பட்டது, ராதாரவி சிரிப்பது தனியாக படமாகப்பட்டது, விஜய், சூர்யா ஆகியோர் சிரிப்பதும் தனியாக படமாக்கப்பட்டது…
இன்னும் சொல்லப்போனால் வடிவேலுவின் அந்த காமெடி காட்சி படமாக்கப்படும் போது விஜய் அந்த இடத்திலேயே இல்லை. ஆனாலும் அந்த காட்சியை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அவ்வளவு அருமையாக இருக்கும்.
சிலர் காமெடி காட்சி தானே என்று அசால்ட்டாக படப்பிடிப்பு நடத்துவார்கள். ஆனால், காமெடி காட்சியிலும் உழைப்பை போட்டால் அந்த காட்சியிலும் கவனம் செலுத்தினால் அது அடுத்த கட்டத்தில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நல்ல வரவேற்பு பெறும் என்பதற்கு நேசமணி என்ற கதாபாத்திரத்திற்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பு தான் சாட்சி.
எனவே காமெடி காட்சிகளுக்கும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காமெடி காட்சிகள் ஒரு படத்தில் ஒர்க்கவுட் ஆகும் போது அந்த படம் நீண்ட நாள் ரசிகர்கள் மத்தியில் நிலைத்திருக்கும் என்று பேசியிருக்கிறார் மதன் பாபு.