நடு காட்டில் மனைவியின் சடலத்துடன் கணவர் செய்த அதிர்ச்சி செயல்! இறுதியில் வெளிவந்த கொடூர ரகசியம்!

நிர்மல் : தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில், மனைவியை கொலை செய்து அதனை பாலியல் வன்கொடுமை நடந்தது போல மாற்றி காட்ட முயன்ற கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்மல் மாவட்டம் கானாபூர் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவருக்கும், 30 வயதான மௌனிகாவுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு கூடுதல் வரதட்சணை கேட்டு மௌனிகாவை கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த மே 9-ம் தேதி மௌனிகா காணாமல் போனதாக அருண் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை தொடங்கினர். அதே நாளில் தர்லபஹாட் காட்டுப் பகுதியில் நிர்வாண நிலையில் கிடந்த பெண் சடலம் குறித்து தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அது மௌனிகாவின் உடல் என்பதை உறுதி செய்தனர்.

இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே கணவர் அருணின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. செல்போன் பதிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அருணை பிடித்து விசாரித்தனர். விசாரணையின் போது, மனைவியை தானே கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனைவியின் மீது சந்தேகம் கொண்டிருந்த அருண், சம்பவ நாளில் “வெளியே செல்லலாம்” என்று கூறி மௌனிகாவை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர், சம்பவத்தை வேறு கோணத்தில் காட்ட முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக உடலை அவமதிக்கும் வகையில் காட்சியை மாற்றியமைத்து, நகைகள் மற்றும் செல்போனை மறைத்து வைத்துவிட்டு, பின்னர் மனைவி காணவில்லை என நாடகம் ஆடியதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் அருணின் பெற்றோர்களான ஸ்ரீநிவாஸ் மற்றும் தெள்ளி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தங்க நகைகள், செல்போன் மற்றும் பைக் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளியாகக்கூடும் என்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Check Also

16 முறை வெட்டப்பட்டு உயிர் தப்பிய பெண்..! இன்று மாநில விருது வென்ற விஜய் பட நடிகை!

தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தனது முயற்சி மற்றும் விடாமுயற்சியால் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய நடிகைகளில் …