“இரட்டை குழந்தைகள்… ஆனால் 2 தந்தைகள்! 19 வயது பெண் சொன்ன அதிர்ச்சி உண்மை!”

பிரேசிலில் நடந்த அரிய மருத்துவ சம்பவம் ஒன்று உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. 19 வயது இளம் பெண் ஒருவர் பெற்ற இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தையர் இருப்பது DNA பரிசோதனையில் உறுதியாகி மருத்துவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் வெளியிடப்படாத அந்த இளம் பெண், ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு ஆண்களுடன் உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் கர்ப்பமாகி, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

இரு குழந்தைகளும் தோற்றத்தில் மிகவும் ஒரே மாதிரியாக இருந்ததால், யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. ஆனால் குழந்தைகள் ஒரு வயதை நெருங்கியபோது, “இருவருக்கும் ஒரே தந்தையா?” என்ற சந்தேகம் தாயின் மனதில் எழுந்துள்ளது.

இதையடுத்து, அவர் தன்னுடன் உறவில் இருந்த ஒருவருக்கு DNA பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில், இரட்டைக் குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே அந்த ஆண் உயிரியல் தந்தை என்பது தெரியவந்தது.

அதன் பின்னர், மற்றொரு நபருக்கும் DNA பரிசோதனை செய்யப்பட்டதில், இரண்டாவது குழந்தைக்கு அவர் தந்தை என்பது உறுதியாகியுள்ளது. இந்த முடிவு அந்த இளம் தாயை மட்டுமல்லாமல், மருத்துவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த அரிய மருத்துவ நிகழ்வு “ஹெட்டெரோபேட்டர்னல் சூப்பர்ஃபெகுண்டேஷன்” (Heteropaternal Superfecundation) என அழைக்கப்படுகிறது. அதாவது, ஒரே மாதவிடாய் சுழற்சியில் வெளியான இரண்டு கருமுட்டைகள், இரண்டு வெவ்வேறு ஆண்களின் விந்தணுக்களால் கருவுறுவது.

இந்த சம்பவம் குறித்து பேசிய மருத்துவர் டாக்டர் துலியோ ஜார்ஜ் ஃபிராங்கோ, “மனிதர்களிடம் இது மிகவும் அரிதாக நடைபெறும் நிகழ்வு. உலகளவில் இதுபோன்ற சில சம்பவங்களே பதிவாகியுள்ளன. இரண்டு கருமுட்டைகள் வெளியாவதும், அவை வெவ்வேறு ஆண்களின் விந்தணுக்களால் கருவுறுவதும் இணைந்தால் மட்டுமே இது சாத்தியம்” என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவ ரீதியாக இது அரிதான சம்பவமாக இருந்தாலும், விலங்குகளில் இது சாதாரணமாக நடைபெறக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக நாய்கள், பூனைகள் மற்றும் பசுக்கள் போன்றவற்றில் பல தந்தையரால் கருவுறும் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

தற்போது அந்த இரட்டைக் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து வருவதாகவும், இருவரையும் சமமாக நேசித்து வளர்த்து வருவதாகவும் அந்த இளம் தாய் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் இருவரும் என் குழந்தைகள். அவர்களுக்கு வேறு வேறு தந்தையர் இருந்தாலும், எனக்கு அவர்கள் மீது இருக்கும் அன்பு ஒன்றுதான்,” என்று அவர் உருக்கமாக கூறியுள்ளார்.

Check Also

கள்ளத் தொடர்புக்காக தோழிகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு! இரு குழந்தைகளின் தாயைச் சுற்றி பரபரப்பு!

திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பெண்களின் தனியுரிமையை மீறும் வகையில் ரகசியமாக வீடியோ பதிவு …