டெல்லியைச் சேர்ந்த பிரபல யூட்யூபர் Riya Kapoor தனது “Street Talk with Riya” தொடரின் புதிய எபிசோடில் இளம் பெண்களிடம் கேட்கப்பட்ட ஒரு திறந்த கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில், டெல்லியின் பல பகுதிகளில் உள்ள பெண்களிடம், “ஒரு பெண் தன்னம்பிக்கையுடன் இருப்பதை வைத்து அவர்களின் தனிப்பட்ட பழக்கங்களை வெளியில் இருந்து கணிக்க முடியுமா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. பல பெண்கள் இதற்கு தயக்கமின்றி தங்கள் கருத்துகளை பகிர்ந்ததால் வீடியோ வைரலாகியுள்ளது.

25 வயதான மென்பொருள் ஊழியர் ஒருவர், “வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இருக்காது. ஆனால் சில பெண்கள் அதிக தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். அவர்களின் உடல் மொழி மற்றும் பேச்சில் ஓர் openness இருக்கும்,” என்று கூறினார்.

28 வயது மார்க்கெட்டிங் நிர்வாகி ஒருவர், “இதுபோன்ற விஷயங்கள் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சார்ந்தவை. வெளியில் இருந்து யாரையும் பார்த்து முடிவு செய்ய முடியாது,” என்று தெரிவித்தார்.

மற்றொரு கல்லூரி மாணவி, “இப்போது இளைஞர்கள் மனநலம், உடல்நலம், தனிநேரம் போன்ற விஷயங்களை திறந்த மனதுடன் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் தவறு இல்லை,” என்று கூறினார்.
திருமணமான பெண் ஒருவர், “திருமணமான பெண்களும் தங்கள் உடல் மற்றும் மனநலத்தை கவனிப்பது சாதாரண விஷயம்தான். ஆனால் அதை வைத்து ஒருவரை judge செய்யக்கூடாது,” என தனது கருத்தை பகிர்ந்தார்.

இந்த வீடியோவில் Riya Kapoor, “பெண்களும் தங்களது உடல் மற்றும் மன உணர்வுகளைப் பற்றி வெட்கப்படாமல் பேச வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் மரியாதையுடனும் பொறுப்புடனும் அணுக வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
வீடியோ வெளியானதும் சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகள் உருவாகியுள்ளன. சிலர் இதை “தைரியமான மற்றும் திறந்த உரையாடல்” என்று பாராட்ட, சிலர் “அதிகப்படியான தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் பேச வேண்டாம்” என்று விமர்சித்துள்ளனர்.
எனினும், இளைஞர்கள் மத்தியில் மனநலம், தனிநேரம் மற்றும் உடல் பற்றிய விழிப்புணர்வு குறித்து திறந்த மனதுடன் பேசும் சூழல் உருவாகி வருவதை இந்த விவாதம் வெளிப்படுத்துகிறது.