நடிகை மாளவிகா,(Malavika) தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நாயகி. தமிழ் சினிமாவில் அன்று ‘உன்னைத்தேடி’ படத்தில் அறிமுக நாயகியாக நடிக்க வந்த போது, இளம் வயதில் எப்படி இருந்தாரோ, அப்படித்தான் இப்போதும், ரசிகர்களை ‘கிக்’ ஏற்றும் வசீகரத்துடன் இருக்கிறார்.
சில பெண்களுக்கு வயதானாலும், அழகு குறைவதே இல்லை. அந்த பட்டியலில் மாளவிகாவும் ஒருவர். மாளவிகாவின் உண்மையான பெயர் ஸ்வேதா கோனூர். மாடலிங் அழகியான இவர், இயக்குநர் சுந்தர் சி இயக்கிய ‘உன்னைத்தேடி’ படம் மூலம், அஜித்குமார் ஜோடியாக, தமிழ் சினிமாவுக்குள் வந்தார்.
அதன்பிறகு தமிழில் ரோஜாவனம், வெற்றிக்கொடி கட்டு, வியாபாரி, சந்திரமுகி, திருட்டுப்பயலே, ஆனந்த பூங்காற்றே, திருமகன் உள்பட பல படங்களில் நடித்தார். இடையில் தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால், தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்தார்,
பின், பேரழகன் படத்தில், சூர்யாவுடன் ஒரு பாடல் காட்சியில் சிறப்பு தோற்றம் தந்தார். அதேபோல், இயக்குநர் மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படத்தில், ‘வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ பாடலில், வயிறும், தொப்புளும் குலுங்க, குலுங்க ஒரு சூப்பர் குத்தாட்டம் போட்டு, ரசிகர்களை கிறுகிறுக்க வைத்தவர்தான் மாளவிகா. அந்த பாடல், அந்த படம் வெளியான காலகட்டத்தில், பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.
நல்ல நடிப்பு ஆற்றல் கொண்ட மாளவிகா, தனது சில படங்களில் கவர்ச்சியால் ரசிகர்களை உற்சாகப்படுத்த தயங்கவில்லை,. பல காட்சிகளில் தனது உடல் அழகை எக்டாபிலிஷ் செய்து, ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறார்.
இரவு நேரங்களில் தூங்க விடாமல் தவிக்க விட்டிருக்கிறார். அம்மணியின் உதட்டு சுழிப்பு சிரிப்பும், காந்தப்பார்வையும், வசீகரிக்கும் உடல் மொழியும், ரசிகர்களை இப்போதும் கிறுகிறுக்க செய்கிறது.
ஒரு கட்டத்துக்கு பிறகு, திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆன மாளவிகாவுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வயது 40 ஐ தொட்டுவிட்ட நிலையிலும், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார் மாளவிகா.
சினிமாவை போலவே, தனது சமூகவலைதள பக்கத்திலும் ரசிகர்களை ஏங்க வைப்பதில் குறியாக இருக்கிறார். அதற்கேற்ப, மாடர்ன் உடைகளில் மப்பு ஏற்றும் விதமாக படங்களை, வீடியோக்களை பதிவிடுகிறார்.
யோகா செய்வது, உடற்பயிற்சி செய்வது, குட்டையான ஆடைகளில் ரிலாக்ஸ் ஆக போஸ் தருவது என, அம்மணி மாளவிகாவின் ‘அட்ராசிட்டி’ கிளாமரால், ரசிகர்கள் மிரண்டு போய் கிடக்கின்றனர்.
சில அழகான நடிகைகள், தமிழ் சினிமாவுக்குள் வருவது அதிர்ஷம் என்றால், திகட்ட திகட்ட அழகு திமிறுகிற நிலையில், இன்னும் நிறைய காலம், சினிமாவில் நீடித்திருக்காமல், சினிமாவை விட்டு திடீரென ஒதுங்கி விடுவது துரதிஷ்டம்தான், அந்த வகையில், திம்சு கட்டையான மாளவிகாவை திரையில் காண முடியாமல், ரசிகர்கள் ஏங்கித்தான் போயுள்ளனர்.
எனினும் தாகம் தீர்க்கும் கோடை மழை போல, அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு, மாளவிகா ரசிகர்களின் ஏக்கத்தை போக்கி வருகிறார். நிறைய பட்டன்களை போடாமல், திறந்து கிடக்கும் சிவப்பு நிற சட்டையில், முன்னழகு மிளிர குட்டை ட்ரவுசரில் மாளவிகா தந்துள்ள போஸ், ரசிகர்களை ‘ அடேங்கப்பா’ என, இன்பக்கடலில் ஆழ்த்தி வருகிறது.