மும்பையில் இளம் பெண்களிடம் திறந்தவெளி கேள்விகளை எழுப்பி சமூக ஊடகங்களில் கவனம் பெற்று வரும் பிரபல பெண் யூடியூபர் ஒருவர் வெளியிட்ட புதிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மும்பையின் பிரபல கல்லூரி பகுதி ஒன்றில் நடத்தப்பட்ட “Street Talk Mumbai” என்ற நிகழ்ச்சியில், கல்லூரி மாணவிகளிடம் உறவுகள் மற்றும் உணர்ச்சிகள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், “உறவில் எந்த விஷயங்கள் உங்களுக்கு அதிக கம்ஃபர்ட்டையும் மகிழ்ச்சியையும் தருகிறது?” என்ற கேள்வி பலரின் கவனத்தை ஈர்த்தது.

இந்த வீடியோவில் 18 முதல் 24 வயதுக்குள் உள்ள பல இளம் பெண்கள் பங்கேற்று தங்கள் அனுபவங்கள் மற்றும் விருப்பங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்துள்ளனர். ஆரம்பத்தில் தயக்கத்துடன் இருந்த சிலர் பின்னர் சிரித்தபடி பதிலளித்தனர்.

ஒரு மாணவி, “எனக்கு பிடித்த உணவு அருகில் இருந்தாலே நான் ரிலாக்ஸ் ஆகிவிடுவேன். Pizza இருந்தால் மூடே மாறிடும்” என்று கூறியுள்ளார். மற்றொருவர், “மென்மையான ரொமான்டிக் பாடல்கள் கேட்டால் தான் எனக்கு கம்ஃபர்ட்டாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும் ஒரு இளம் பெண், “நாங்கள் இருவரும் சேர்ந்து ஜாலியாக டான்ஸ் ஆடுவோம். அந்த fun moment தான் எங்களுக்கு முக்கியம்” என்று கூறியுள்ளார். இன்னொரு மாணவி, “Ice cream சாப்பிட்டுக் கொண்டே பேசினால் மனநிலை லைட்டாகி விடும்” என நகைச்சுவையாக பதிலளித்தார்.
வீடியோவில் சிலர் தங்களின் ‘cute habits’ பற்றியும் பகிர்ந்துள்ளனர். ஒருவர், “என் அறையில் இருக்கும் Teddy Bear எனக்கு lucky charm மாதிரி” என்றார். மற்றொருவர், “அன்பான வார்த்தைகள் கேட்டால் தான் நான் emotional ஆக connect ஆகுவேன்” என்று கூறினார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சிலர் இதை இளம் தலைமுறையின் திறந்த மனப்பான்மையாக பாராட்டியுள்ள நிலையில், மற்றொருபக்கம் இப்படியான கேள்விகள் குறித்து விவாதங்களும் எழுந்துள்ளன.
யூடியூபரும் தனது சமூக ஊடகப் பதிவில், “கேள்விகள் bold ஆக இருந்தாலும், பதில்கள் மிகவும் fun மற்றும் innocent ஆக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று, சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.