“பெண்கள் கழிவறை அருகே மறைந்து நின்ற இளைஞர்… போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்!”

சென்னை கிண்டி பகுதியில், இளம்பெண் ஒருவர் குளித்துக்கொண்டிருந்தபோது பாத்ரூம் ஜன்னல் வழியாக செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்ததாக 31 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், தனது தோழிகளுடன் கிண்டியில் வாடகை வீட்டில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அதிகாலையில் அவர் குளிக்க சென்றபோது, பாத்ரூம் ஜன்னல் அருகே சந்தேகத்திற்கிடமான வெளிச்சம் தெரிந்ததாக கூறப்படுகிறது.

சந்தேகமடைந்து அருகில் சென்று பார்த்தபோது, ஜன்னல் வழியாக ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக வெளியே வந்து அந்த நபரை தடுக்க முயன்றுள்ளார்.

அப்போது அந்த நபர் தப்பிச் செல்ல முயன்றதாகவும், இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இளம்பெண் சத்தமிட்டதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்ததால், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் பாத்ரூம் அருகே சோதனை செய்தபோது, அங்கு மேலும் ஒரு செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இரு செல்போன்களையும் எடுத்துக்கொண்டு இளம்பெண் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முல்லைநாதன் (31) என்பது தெரியவந்தது. அவர் கிண்டி பகுதியில் நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பெண்கள் வசிக்கும் பகுதிகளில் இதுபோன்ற செயல்களில் அவர் ஏற்கனவே ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கூடுதல் செல்போன்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட முல்லைநாதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உள்ள தகவல்கள் மற்றும் வீடியோக்கள் குறித்து டிஜிட்டல் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் கிண்டி பகுதியில் பெண்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. “பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் கண்காணிப்பு தேவை” என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Check Also

கள்ளத் தொடர்புக்காக தோழிகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு! இரு குழந்தைகளின் தாயைச் சுற்றி பரபரப்பு!

திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பெண்களின் தனியுரிமையை மீறும் வகையில் ரகசியமாக வீடியோ பதிவு …