சினேகா தற்போது தனது குடும்பத்துடன் கோடை விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழித்து வரும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

“புன்னகை அரசி” என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சினேகா, கடும் கோடை வெயிலில் இருந்து குளிர்ச்சியாக இருக்க தனது குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் விளையாடிய தருணங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

நீச்சல் உடையில் மகன் மற்றும் மகளுடன் சிரித்தபடி விளையாடும் அவரது இயல்பான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிடும் அந்த தருணங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “சினேகாவின் புன்னகை இன்னும் அதே போல இருக்கிறது”, “இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கிறீர்கள்” என பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

மேலும் சிலர், “அம்மாவும் குழந்தைகளும் சேர்ந்து இருக்கும் இந்த தருணங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருமணத்திற்குப் பிறகும் தனது ஃபிட்னஸ் மற்றும் அழகை சிறப்பாக பராமரித்து வரும் சினேகா, சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் இணைந்திருக்கிறார்.

குடும்பத்துடன் எளிமையாக மகிழ்ச்சியாக இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.