பிக் பாஸ் ஏழாவது சீசன் நிகழ்ச்சியில் அடிப்படை கல்வி குறித்தான விவாதம் எழுந்திருக்கிறது பிரபல நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா எனக்கு படிப்பு வரவில்லை என்பதால் ஒன்பதாம் வகுப்பிலேயே என்னுடைய படிப்பை நான் நிறுத்தி விட்டேன்.
அதன் பிறகு நடிப்பில் டிப்ளமோ முடித்திருக்கிறேன் என்று பேச்சுவாக்கில் கூற அதனை கேட்ட விசித்திரா கண்டிப்பாக ஒரு 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அதுதான் உன்னுடைய எதிர்காலத்துக்கு சிறப்பாக இருக்கும் என்று தன்னுடைய கருத்தை கூறியிருந்தார்.
அதன் பிறகு பாடகரும் நடிகருமான மகேந்திரன் ஒரு டிகிரியாவது வாங்கி வைத்திருக்க வேண்டும் நடிப்பு துறையில் பல்வேறு டிகிரி படிப்புகள் இருக்கின்றன ஏதாவது ஒரு டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதுதான் நன்றாக இருக்கும்.
ஏனென்றால் இன்று நீங்கள் நடித்து விடலாம்.. ஆனால் நாளை உங்களால் படிக்க முடியாது.. நீங்கள் பழகக் கூடிய அனைவருமே நன்கு படித்து இருப்பார்கள். அந்த இடத்தில் நீங்கள் மட்டும் தான் பள்ளி படிப்பு கூட முடிக்காத ஒரு நபராக இருப்பீர்கள் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை வருவதற்கு அது காரணமாக அமைந்து விடும் என்ற கோணத்தில் பேசியிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து மிகப்பெரிய சச்சரவு வெடித்திருக்கிற. படித்தால் தான் முன்னேற முடியும் என்ற எந்த சட்டமும் கிடையாது.. படிப்பு வராமல் பலர் தவறான முடிவு எடுத்துக் கொள்கிறார்கள்.. அவர்களின் சார்பாக தான் நான் வந்திருக்கிறேன் என ஏக வசனம் பேசிக் கொண்டிருக்கிறார் ஜோவிகா.
இவருடைய கருத்துக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய சினிமா பின்புலம், பண பலம் என அனைத்தையும் கொண்டிருக்கும் ஒரு பெண் படிப்பு வரவில்லை என்றால் நடிக்க சென்று விடுவார்.
ஆனால் சாதாரண நடுத்தர வர்க்க மக்கள் என்ன செய்வார்கள்..? ஒரு ஏழை என்ன செய்வான்..? என்ற கேள்விகளை ஜோவிகாவை நோக்கி வீசி வருகின்றனர்.
20 வயதில் தன்னுடைய எல்லையை மீறி பேசிக் கொண்டிருக்கிறார் ஜோவிகா என்பதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் ஜோவிகாவின் இந்த பேச்சுக்கு நடிகர் கோபிநாத் ஏற்கனவே பேசியிருந்த ஒரு வீடியோவை இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர் ரசிகர்கள். அந்த வீடியோ இதோ,