கல்வி சர்ச்சை..! – கமல் கேட்ட ஒரு கேள்வி..! – விழி பிதுங்கிய வனிதா மகள் ஜோவிகா..!

0
458

கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட ஒரு பிரச்சனை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவின் படிப்பு குறித்த தற்குறித்தனமான பேச்சு தான்.

எனக்கு படிப்பு வரவில்லை அதனால் ஒன்பதாம் வகுப்பு நின்று விட்டேன். அதன் பிறகு நடிப்பில் ஒரு டிப்ளமோ படித்து வைத்திருக்கிறேன் என்று கூறினார் ஜோவிகா. இந்த காலத்தில் ஒரு 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறினார் நடிகை விசித்ரா.

நேற்று நடந்த ஒரு டாஸ்கின் போது இந்த விவகாரம் சம்பந்தமே இல்லாமல் விஸ்வரூபம் எடுத்தது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கருத்து சொல்ல நீங்கள் யாரென்று ஆரம்பித்த ஜோவிகாவின் பேச்சு ஒரு கட்டத்தில் படிப்பு இருந்தால் தான் வாழ வேண்டும் என்று அவசியம் கிடையாது.. படிக்க முடியவில்லை என எத்தனையோ பேர் தவறான முடிவு எடுத்துக் கொள்கிறார்கள் அவர்களுடைய சார்பாக தான் நான் இங்கே வந்திருக்கிறேன் என்று ஏக வசனம் பேசினார்.

இதை இணைய வட்டாரத்தில் பேசுபொருளானது. படிப்பு தேவையில்லை என்பதை Normalize செய்ய இந்த நிகழ்ச்சி முயன்றால் அது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.

இதனை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் இந்த விவகாரத்தில் என்ன கருத்து கூற போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், சற்று முன்பு வெளியான ப்ரோமோவில் இதற்கான விடையை கொடுத்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

அவர் கேட்ட ஒரு கேள்வியில் ஜோவிகா ஒரு நிமிடம் உறைந்து போனார். கமல்ஹாசன் கேட்ட கேள்வி என்னவென்றால், நீங்கள் எப்போதாவது கல்வி முக்கியமில்லை என்று கூறி இருக்கிறீர்களா..? என்று கேட்டார்.

அதற்கு பதில் அளிக்காமல் அமர்ந்திருந்த ஜோவிகா. நான் அப்படி கூறியது இல்லை என்று சொல்ல முற்படுவார் போல் தெரிகிறது.

ஆனால் கல்வி முக்கியமில்லை, கல்வி இல்லாமல் ஒருவரால் ஜெயிக்க முடியும் என்பது தான் ஜோவிகாவின் வாதமாக அவருடைய கருத்தின் அடி நாதமாக இருந்தது.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் நீங்கள் விசித்ராவின் கருத்தை புரிந்து கொள்ளவில்லை. இது இரண்டு தலைமுறைக்கான இடைவெளி. விசித்ரா கூறியதில் எந்த தவறும் கிடையாது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் படிப்பு முக்கியம் அதே சமயம் படிப்பிற்காக உயிரை விட்டு படிக்க வேண்டும் என்ற அந்த அவசியமும் கிடையாது. கற்றல் விதி இருக்கலாம் ஆனால் கற்றல் வதை இருக்கக் கூடாது என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

ஒரு 20 வயது ஆன ஒரு பெண் என்பதால் ஜோவிகாவை இந்த விஷயத்தில் இதற்கு மேற்கொண்டு ஏதேனும் அழுத்தமாக அவருடைய கருத்தை திட்டவோ திருத்தவோ செய்தால் அது சரியாக இருக்காது என்பதால் அவருடைய வயதுக்கு ஏற்றார் போல தன்னுடைய கருத்தை பக்குவமாக பதிவு செய்திருக்கிறார் கமல்ஹாசன் என்று பார்க்க முடிகிறது.