உனக்கு படிப்பு வரலனா.. சினிமாவுக்கு போயிடுவ.. நாங்க என்ன பண்றது.. தற்குறி ஜோவிகா-வை விளாசும் ரசிகர்கள்..!

0
477

பிக் பாஸ் 7வது சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கக்கூடிய வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தனக்கு படிப்பு வரவில்லை என்றும் அதனால் நடிப்பில் டிப்ளமோ முடித்து வைத்திருக்கிறேன்.

ஒன்பதாம் வகுப்போடு படிப்பதை நிறுத்தி விட்டேன் என்று பேசியிருந்தார். இதனை தொடர்ந்து சக பிக் பாஸ் போட்டியாளர்கள் விசித்திரா மற்றும் மகேந்திரன் இருவரும் பனிரெண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் ஒரு டிகிரி ஆவது கையில் வைத்திருக்க வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்தனர்.ஆனால் என்னை படிக்க சொல்ல நீங்கள் யார்..? படிப்பு இருந்தால்தான் வாழ்க்கையா..? படிக்க முடியவில்லை என்று நிறைய பேர் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். அவர்களின் சார்பாக தான் நான் இங்கே வந்திருக்கிறேன் என்று ஏக வசனம் பேசுகிறார்.

இதில் கொடுமை என்னவென்றால் ஜோவிகா-வின் இந்த பேச்சுக்கு பல பிக்பாஸ் போட்டியாளர் கை தட்டி ஊக்கம் கொடுக்கிறார்கள்.அப்படி கை தட்டுபவர்கள் தங்களுடைய குழ்னதைகளை பள்ளிக்கு அனுப்பாமல் விட்டு விடுவார்களா..? அடிப்படை கல்வியை கூட கொடுக்க மாட்டார்களா..? என்ற கேள்வி எழும்புகிறது.ஜோவிகா கூறிய கேட்ட ரசிகர்கள் நீங்கள் சினிமா பின்புலம் கொண்டவர்க.. படிப்பு வரவில்லை என்றால் சினிமா பக்கம் சென்று பணம் சம்பாதித்து கொண்டு செட்டில் ஆகிவிடுவீர்கள்… பிரபலத்தின் மகள் என்பதால் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து விட்டீர்கள்..ஆனால் ஒரு நடுத்தர வர்க்கத்தினர் ஏழாயை குடும்பத்தினர் படித்தால் தான் அவர்களுக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அவருக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும், அல்லது அவர்களுக்கான வாய்ப்பை உருவாக்கக்கூடிய திறமை கிடைக்கும்.

அப்படி இருக்கும் பொழுது ஒரு சினிமா பின்புலத்தை வைத்துக்கொண்டு மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் குடும்பத்தில் இருந்து வந்துவிட்டு நான் படிக்கவில்லை படித்தால் தான் வாழ்க்கை என்று நான் நம்பவில்லை.. என்று நீங்கள் கூறிக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம் என்று கூறி வருகின்றனர்.

மேலும் இந்த விவகாரம் குறித்து நடிகர் கமலஹாசன் என்ன கருத்து சொல்ல போகிறார் இந்த விவகாரத்தையும் நீட் தற்கொலை விவகாரத்தையும் கோர்த்து விட்டு ஏதேனும் அரசியல் விளையாட்டு விளையாடு அல்லது நிதர்சனத்தை பேசுவாரா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடிப்படை கல்வி அனைவருக்கும் வேண்டும் என போராடியது நம் சமுதாயம்… இடைநிற்றல் வந்து விடக்கூடாது என்பதால் பத்தாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று சுமாராக படித்தாலும்… பத்தாம் வகுப்பு வரை அவர்களின் கையை பிடித்து அழைத்து சென்று உலகை காட்ட வேண்டும் என்று பயணித்து கொண்டிருப்பது நம் சமுதாயம்..

ஆனால், இங்கே தற்குறித்தனமாக படித்தால் தான் சாதிக்க முடியுமா..? என மிகப்பெரிய பண பலம் மற்றும் திரை பிரபலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த ஒரு பெண் பேசுகிறார்.

அதற்கு, சக பிக்பாஸ் போட்டியாளர்கள் கை தட்டி ஆதரவு கொடுகிறார்கள். இந்த விவகாரத்தை எப்படி புரிந்து கொள்வது..? உங்களுடைய கருத்தை தவறாமல் கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.