பெண்களின் இந்த உறுப்பில் இருந்து இந்த கார் டிசைன் எடுக்கப்பட்டது..! – எலான் மஸ்க் பதிவிட்ட புகைப்படம்..!

0
301

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் உலக பணக்காரர் பட்டியலில் முக்கியமான இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் ட்விட்டர் சமூகவலைத்தளத்தை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கி இருந்தார்.

தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது கேளிக்கையான சித்திரங்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

சில நேரங்களில் இவர் செய்யக்கூடிய செயல்கள் இவர் பதிவிடக்கூடிய விஷயங்களை எல்லாம் பார்த்தால் உலக பணக்காரர்களில் ஒருவர் செய்யக்கூடிய வேலையா இது..? சில்லறைத்தனமா இருக்கே.. என்றெல்லாம் விமர்சனங்கள் எழும்.

அந்த அளவுக்கு நடவடிக்கைகள் இருக்கின்றன. அந்த வகையில், சமீபத்தில் எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய சைபர் ட்ரக் என்ற மின்சார வாகனத்தின் வடிவமைப்பு எதிலிருந்து பெறப்பட்டது என்பதை கேளிக்கையாக ஒரு மீம் மூலம் பதிவு செய்திருக்கிறார்.

வலிமையான கட்டமைப்புடன் உருவாகி இருக்கக்கூடிய ஒரு மின்சார வாகனமான சைபர் ட்ரக் மீது உலகம் முழுதும் பலரும் பலர் எதிர்பார்ப்புகளை வைத்திருக்கின்றனர். விபத்துகளில் சிக்கினாலும் அதில் பயணிப்பவர்களுக்கு எதுவும் ஆகாத அளவுக்கு வலுவான உலோகங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சைபர் ட்ரக் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

பல ஆண்டு காலமாக கடந்த சில ஆண்டுகளாக இதுகுறித்து ப்ரோட்டோ டைப் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி கொண்டிருந்தன.

ஆனால், சமீபத்தில் இதனை நிஜமாகவே அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க். இந்நிலையில், இந்த காரின் வடிவமைப்பு பெண்களின் மார்பக வடிவத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை கூறும் விதமாக ஒரு மீமை பதிவு செய்திருக்கிறார் மஸ்க். இந்த மீம் இணைவாசிகளின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.