
ஒடிசா மாநிலம் மால்கங்கேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 13 வயது மாணவியர் இருவர், அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர்.
கடந்த 7ம் தேதி, பள்ளியில் இருந்து அவர்கள் வீடு திரும்பாததால், அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர் புகார் அளித்தனர்.இரண்டு நாட்களாக மாணவியரை போலீசாரும், பெற்றோரும் தேடி வந்த நிலையில், மால்கங்கேரி வனப்பகுதியில் சடலங்கள் கிடப்பதாக நேற்று தகவல் கிடைத்தது.போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில், இரண்டு மாணவியரின் உடல்களும் பள்ளிச் சீருடையுடன் துாக்கில் தொங்கியபடி கிடந்தன.
மாணவியர் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மால்கங்கேரி மாவட்ட வனப்பகுதிகள், நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதி. இந்த சம்பவத்தில் நக்சல்களுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.