
சட்டவிரோதமாக குடியேறியதாக மேலும் 487 இந்தியர்களை அமெரிக்கா வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என அந்நாட்டு குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறையிடம் வலியுறுத்தி வருவதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது தொடர்பாக நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் கடைபிடிப்பது குறித்து அமெரிக்கா குடியேற்றத் துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.