
கோடை கால மின் தேவையை சமாளிக்க, 8525 மெகாவாட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்கிக்கொள்வதற்கு, மின் வாரியத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கோடைகால மின் தேவை கடுமையாக அதிகரிக்கும். அப்போது மின்சாரம் பாதிப்பின்றி மக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் கோடை கால மின் தேவையை சமாளிக்க, 8525 மெகாவாட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்கிக் கொள்வதற்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
அதேபோல், பிப்ரவரி – மே மாதம் வரையில் நள்ளிரவு 12 மணி – மாலை 6 வரையிலான மின் தேவையை சமாளிக்க 2750 மெகாவாட் மின்சாரம் வாங்கவும், பீக் ஹவர்ஸான மாலை 6 மணி நள்ளிரவு 12 மணி வரை 5,775 மெகாவாட் மின்சாரம் வாங்கவும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் முடிவு செய்துள்ளது.