பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரமே மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த விஷயம் பிக் பாஸ் ரசிகர்களை தாண்டி பொதுவான இணையவாசிகளாலும் பொதுமக்களாலும் கவனிக்கப்பட்ட ஒரு விஷயம் என்ன என்று கேட்டால் அது வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவின் கல்வி குறித்த பேச்சு தான்.
அடிப்படை கல்வி குறித்த தவறான புரிதலில் தற்குறித்தனமான தன்னுடைய பதிவை பிக் பாஸ் வீட்டில் பதிவு செய்திருந்தார் ஜோவிகா.
படித்து தான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது படிப்பு வராததால் தவறான முடிவு எடுத்துக் கொள்ளும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் அவர்களுடைய முகமாகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன் என்னால் ஜெயிக்க முடியும் என்று ஏக வசனம் பேசினார்.
ஆனால், இவருடைய வசனம் எதுவுமே நிதர்சனத்திற்கு ஒத்து வராது. நீங்கள் ஒரு சினிமா நடிகையின் மகள் படிப்பு வரவில்லை என்றால் நடிகையாகி விடுவீர்கள். சாதாரண ஆட்கள், நடுத்தர வர்க்கத்தினர் படிப்பு வரவில்லை என்று படிக்க வில்லை என்றால் என்ன செய்வார்கள்..? என்று ஜோவிகா-வின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தனர்.
பிக் பாஸ் வீட்டில் ஒரு டாஸ்கின் போது 400-ஐ 4-ஆல் பெருக்கினால் எவ்வளவு கிடைக்கும்..?
ஒரு வழியாக இந்த சர்ச்சை முடிந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் ஒரு டாஸ்கின் போது 400-ஐ 4-ஆல் பெருக்கினால் எவ்வளவு கிடைக்கும்..? என்ற கேள்விக்கு 800 என்ற பதில் அளிக்கிறார் விஜய். இதற்கு மறுப்பு தெரிவிக்காத ஜோவிகா இன்னும் 400 கிராம் போடுங்க.. என்று கூறுகிறார்.. இதனை பார்த்த ரசிகர்கள் இதற்குத்தான் அடிப்படை கல்வி முக்கியம் என்பது என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.