லியோ – படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..? – திரை விமர்சனம்..!

0
897

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது.

இதற்கு முன்பாக தணிக்கை குழு அதிகாரிகள் மற்றும் லியோ படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் உள்ளிட்டோர் லியோ திரைப்படத்தை பார்த்திருக்கின்றனர்.

இது குறித்து தங்களுடைய கருத்துக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், லியோ படத்தில் இசையமைப்பாளர் அனிருத் லியோ திரைப்படம் குறித்து தன்னுடைய பார்வையை எமோஜிக்கள் வடிவில் பதிவு செய்திருக்கிறார்.

ஏனென்றால் படம் வெளியாவதற்கு முன்பு அவர் கூறக்கூடிய எந்த வார்த்தையும் படத்திற்கு ஸ்பாய்லராக அமைந்து விட வாய்ப்பு இருக்கிறது. எனவே எமோஜிக்களை கொண்டு தன்னுடைய விமர்சனத்தை கொடுத்திருக்கிறார் அனிருத்.

இது ஒரு பக்கம் இருக்க லியோ திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் கூறியது என  ஒரு தகவல் இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

உறுதிப்படுத்தப்படாத இந்த தகவல் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகும் அளவிற்கு வைரலாகி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அதில் அப்படி என்னதான் கூறப்பட்டுள்ளது என்பதையும் தான் பார்த்து விடுவோமே..! அதில் கூறியுள்ளதாவது,  படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் நடிகர் விஜயின் கெட்டப் அவருக்கு பொருந்தவில்லை.

படத்தின் முதல் 50 நிமிடங்கள் மிகவும் மெதுவாக நகர்கின்றன. குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகவில்லை. படத்தின் கிளைமாக்ஸ் நீண்டு கொண்டு போவது சலிப்பு தட்டுகிறது.

நடிகர் அர்ஜுனின் ஆக்சன் காட்சிகள் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன. துரதிஷ்டவசமாக அனிருத்தின் இசை பெரிய அளவில் உதவி செய்யவில்லை. படத்தின் கதைக்கும் அது நடக்கும் இடத்திற்கும் சம்பந்தமே சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை.. என்று தணிக்கை குழு அதிகாரிகள் கூறியதாக உறுதிபடுத்தப்படாத தகவல் இன்று காலை முதல் பல ட்வீட்டுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த ட்வீட்டுகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கும் ஆகி இருக்கின்றது. இன்னும் ஒரு வாரமே படம் வெளியாக உள்ள நிலையில் லியோ படத்தின் மீதான காய்ச்சல் அதிகரித்திருப்பதை இப்படியான தகவல்கள் பரவுவதை கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகிறது நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம். சரியாக 2013-ம் வெளியான தலைவா திரைப்படத்திற்கு தான் இப்படி விண்ணை முட்டும் எதிர்பார்ப்பு இருந்தது.

அதன் பிறகு, வழக்கமான விஜய் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பையே உணர முடிந்தது. ஆனால், தற்போது விஜய்யின் அரசியல் பிரவேஷம், அவரது தனிப்பட்ட அரசியல் நகர்வுகள், ரசிகர் மன்றங்களுக்கு புத்துயிர் ஊட்டியது, விஜய்க்கு இருக்கும் அரசியல் அழுத்தங்கள் என அனைத்தும் சேர்ந்து லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணை முட்ட செய்துள்ளது என்று கூறலாம்.

ரசிகர்களின் வெறித்தனமான காத்திருப்புக்கு லியோ ஈடு கொடுக்குமா..? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.