பிக் பாஸ் ஏழாவது சீசனில் எழுத்தாளரும் முற்போக்கு சிந்தனைவாதி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவருமான பவா செல்லதுரை குறித்து கண்டனங்கள் சமூக வலைதள பக்கங்களில் அதிகம் எழுந்திருக்கின்றது.
காரணம் அவர் பேசுவது அனைத்தும் அவருக்கு ஒரு நியாயம், மற்றவருக்கு வேறு நியாயம், தனக்கு வந்தால் ரத்தம்.. மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போலத்தான் இருக்கிறது.இந்நிலையில் இவருடைய செயல்களை பற்றி இணைய பக்கங்களில் பலரும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர் அந்த வகையில் ட்விட்டர் வாசி சூரிய என்ற ஒருவர் தன்னுடைய கடுமையான ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவு தான் இது.
பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பித்த இந்த வாரத்தின் இரண்டாவது நாளில் நடிகர் பிரதீப் பவா செல்லத்துறை-யை பார்த்து, “வீட்டில் கண்ட இடங்ளில் நீங்கள் எச்சை துப்பிக் கொண்டிருக்கிறீர்கள். அது மற்றவர்களுக்கு சுகாதாரக் கேடாக இருக்கிறது கண்டிப்பாக மாற்றிக் கொள்ளுங்கள்” என்றார்.
அதை வீட்டில் இருந்த அனைவருமே ஆமோதித்தனர்.உடனே பவா அவர்கள், “என் இயல்பை மாற்றிக் கொள்ள முடியாது, கடவுளே வந்தாலும் நான் இப்படித்தான் இருப்பேன் நானாக என் இயல்பை மாற்ற முடியாது” என்று ஒரு சுகாதாரமற்ற மொண்மையான ஒரு வாதத்தை வைத்தார்.சம்பவம் 1இரண்டு நாளுக்கு முன் நடந்த விஜய் வர்மா மற்றும் பிரதீப்புக்கும் நடந்த, “நான் அடிப்பேன், நீ அடிப்பேன்” என்று வன்முறையாக பேசிக் கொண்டிருக்கும் போது பவா ஊடால புகுந்து, “விஜய் நீங்கள் பேசியது இங்கு இருக்கிற யாருக்கும் பிடிக்கவில்லை, நீங்கள் செய்வது தவறு என உங்களுக்கு புரிகிறதா? கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்.குறைந்தபட்சம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
எச்சில் துப்பியது தவறு என அனைவரும் சொன்னபோது மாற்ற முடியாது என்றவர் விஜயை மட்டும் அனைவரின் பேச்சை கேட்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். விஜயிடம் பவா கூறியது சரி என்றாலும் “தனக்கு வந்தா ரத்தம் உனக்கு வந்தா தக்காளி சட்னி” என்பதாய் இருக்கிறார்.சம்பவம் 2வாரத்தின் முதல் நாளில் “பெண்கள் பிரமாதமாக சமைக்கிறார்கள்” என்று சொல்லாதீர். அவர்கள் அதில் பிக்ஸ் ஆகி விடுவார்கள். பெண்கள் படித்து முன்னேற வேண்டும்” என்று மிகவும் முற்போக்கோடு சொன்னதற்கு நான் உள்பட பலர் ஃபயர் விட்டிருந்தார்கள்.ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு விசித்திராவிடம் காபி கேட்டுவிட்டு அவர் தர முடியாது என்றவுடன் பிக்பாஸிடம், “அங்கு வீட்டில் இருக்கும் பெண்கள் பிரமாதமாக சமைக்கிறார்கள் அவர்களை விசித்திர விடவே விடாமல் மொத்தமாக சமையலறையை ஆக்கிரமித்து இருக்கிறார்” என்று முறையிட்டது எவ்வளவு நகைமுரண்.
சம்பவம் 3
சிதம்பர நினைவுகள் என்ற ஒரு பாலியல் அத்துமீறல் கேடுகெட்ட கதையை சொல்லிய போது அப்போது அதற்கு விளக்கம் கேட்டு வந்த ஜோவிகாவிடம், “என்னிடம் விவாதம் வைக்க வேண்டாம். உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள் நான் உங்களிடம் விளக்க தேவை இல்லை” என்று இருமாப்போடு சொன்னார்.
ஆனால் அதே சமயம் விசித்திராவுக்கும் ஜோவிகாவுக்கும் பிரச்சினை வரும்போது விசித்ராவிடம் “ஜோவிகா எவ்வளவு பவ்யமாக கையைத் தூக்கி கேட்கிறார். நீங்கள் மரியாதையாக அவருக்கு பதில் சொல்ல வேண்டும் அல்லவா?’ என்கிறார். ஆனால் இவர் அதை செய்யமாட்டாராம். அடுத்தவருக்கு மட்டும் அநியாய அறிவுரை
சம்பவம் 4
தற்போது மிக முக்கியமான சம்பவத்தை சொல்கிறேன். விவாத பொருளாக ஆகி இருக்கிற ஜோவிகா விசித்திரா கல்வி பற்றிய உரையாடலில், “படிப்பு முக்கியமில்லை, படிச்சிதான் முன்னேறனுமா?. என்றும் நீட் தேர்வுக்கு ஆதரவாக, “எல்லோரும் டாக்டர் ஆனா யார் தான் கம்பவுண்டர் ஆவது?” என்று ஜோவிகா பேசிய போது மிக உணர்ச்சிகளோடு மிக ஆதரவாக கைதட்டி உற்சாகப்படுத்துகிறார் பவா. காமராஜர் கமல் எல்லாம் படித்தார்களா? படிப்பு முக்கியமில்லை” மிக அபத்தமாக சொல்லி அதற்கு மேலும் வலு சேர்க்கிறார்
குரலற்றவர்களின் குரலாக இருப்பார் என்று நினைத்த இந்த முற்போக்கு எழுத்தாளர் மிகவும் பிற்போக்குவாதியாக அம்பலப்பட்டு நிற்கிறார். கல்வி எவ்வளவு முக்கியம். இவரின் குரல் குலக்கல்விக்கு ஆதரவாக இருக்கிறது.
இந்த பிரச்சினை கூட அவருக்கு விசித்திராவுக்கும் இருந்த தனிப்பட்ட பிரச்சனையை வைத்து விசித்திராவுக்கு எதிராக பேச வேண்டும் என்று வன்மத்தை மனதில் வைத்து கல்விக்கு எதிராக குரல் எழுப்புகிறார் பவா.
இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். அப்புறம் இவர் என்ன முற்போக்கு? இவரும் ஒரு சாதாரண மனிதர் தானே? இவரின் எழுத்திற்கும் இவரின் உண்மை முகத்திற்கும் சம்மந்தமே இல்லை. இவரையும் கொண்டாடி இருக்கிறோம் என்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது
கண்டிப்பாக இந்த பிக் பாஸ் என்ற சுவர் முற்போக்கு எழுத்தாளர் என்ற போர்வையில் இருக்கும் பவா செல்லத்துரை முகத்திரையை கிழித்து தொங்கவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.