பிக்பாஸ் 7 – தரமான சம்பவம் Loading..! – போட்டியாளர் மூன் நிலா பற்றி பலரும் அறிந்திடாத தகவல்..!

0
210

பிக் பாஸ் தமிழ் ஏழாவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. அக்டோபர் 1-ம் தேதி பிரமாண்டமாக தொடங்க இருக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த மூன் நிலா என்ற நடிகை கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்த நடிகை குறித்து சில தகவல்களை இங்கே பார்க்கலாம். இவர் மலேசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் தன்னுடைய பெயரை இடம் பிடிக்க வைத்திருக்கிறார்.

எப்படி என்றால்..? ஒரே டிராமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் என்ற வகையில் மலேசியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் என்ற புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறார்.

இவர் ஒரு முன்னாள் செவிலியர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா துறையில் பெண்கள் என்பதற்காக அவர்களை ஒரு பாலியல் பொம்மை போலவும் மரியாதை குறைவாகவும் நடித்தும் போக்கு சினிமா துறையில் இருக்கிறது என்று நம்புவதாக தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், பெண்கள் இப்படியான சீண்டல்களுக்கு அடிப்படையாமல் தங்களுடைய நேர்மையான உழைப்பு மற்றும் மரியாதையை காப்பாற்ற வேண்டும் என்றால் தங்களை சினிமா துறைக்கு அர்ப்பணிப்புடன் நடித்துக் காட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தற்போது, 33 வயதாகும் இவர் இறைவி திருமகள் காடு என்ற திரில்லர் தொடரில் நடித்திருக்கிறார் வயதான கிழவி, இளம் பெண் வேடத்திலும், தேவதை வேடத்திலும் என பல வேடத்திலும் நடித்திருக்கிறார்.

பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் வெளிநாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கலந்து கொள்வது வாடிக்கையா நடந்து வருகிறது. அந்த வகையில் மலேசியாவில் இருந்து இந்த முறை மூன் நிலா கலந்து கொள்ள இருக்கிறார்.