முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் பெயர் பெறாத 5 பிரபலங்கள்.. விக்ரம் படத்தில் மாஸ் காட்டிய ஏஜென்ட் லாரன்ஸ்

0
155

இருப்பினும் சினிமாவில் தனக்கான பெயர் கிடைக்கவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது.

Actor Elango Kumaravel: என்னதான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தாலும், தான் ஏற்கும் கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடிக்கும் பிரபலமாக பெயர் கிடைக்காத ஹீரோ, ஹீரோயின்கள் ஏராளம்.

மேலும் தான் மேற்கொள்ளும் கதாபாத்திரம் மூலம் படம் வெற்றி அடைந்தால் அதுவே அவர்கள் போட்ட முயற்சிக்கு பலனாய் கருதுகின்றனர். அவ்வாறு சரியான கதாபாத்திரங்கள் ஏற்றும் இந்நாள் வரை தமிழ் சினிமாவில் பெயர் தெரியாது, இருக்கும் 5 பிரபலங்களை பற்றி இங்கு காண்போம்.

இளங்கோ குமரவேல்: தமிழ் சினிமாவில் சிறந்த எழுத்தாளர் மற்றும் குணச்சித்திர நடிகராகவும் இருக்கும் இவர் பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அபியும் நானும் படத்தில் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார். மேலும் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்து ஏஜென்ட் லாரன்ஸ் ஆக மாஸ் காட்டிருப்பார். இருப்பினும் இவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரிஷ் உத்தமன்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் சப்போட்டிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி உள்ளார். இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்களில் ஹீரோ கதாபாத்திரத்தை காட்டிலும், வில்லன் கதாபாத்திரமே இவருக்கு பெரிதும் பேசப்பட்டது. ஆயினும் தனக்கான அங்கீகாரத்தை இன்று வரை அவர் பெறவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது.

இனிகோ பிரபாகரன்: தமிழ் சினிமாவில் சப்போர்ட்டிங் ஆக்டராக அறிமுகமான இவர் ஹீரோவாக சில சிறு பட்ஜெட் படங்களில் நடித்திருக்கிறார். சென்னை 600028, சரோஜா, சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருந்தாலும், இன்று வரை இவருக்கான பெயர் கிடைக்கவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது.

ஜோ மல்லோரி: பிரபு சாலமன் படமான கும்கி படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் ஜோ மல்லோரி நடித்திருப்பார். அதை தொடர்ந்து காக்கா முட்டை, ஸ்டாபெரி, சிங்கம் 3 போன்ற படங்களிலும் சிறப்புற நடித்திருப்பார். இருப்பினும் சமீப காலமாக இவர் ஏற்கும் வில்லன் கதாபாத்திரங்கள் இவருக்கு பெரிதும் பேசப்பட்டது. அதில் குறிப்பாக, பத்துதல படத்தில் இவர் தன் நடிப்பின் மூலம் நல்ல விமர்சனத்தை பெற்றிருப்பார்.

ஜெயபிரகாஷ்: பட தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஜெயப்பிரகாஷ் தயாரித்த படம் தான் மாயாண்டி. இவர் பசங்க, நானொடிகள், யுத்தம் செய் போன்ற படங்களில் சப்போர்ட்டிங் ஆக்டர் ஆக நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக 2014ல் வெளிவந்த பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் இவரின் நடிப்பிற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது. இருப்பினும் சினிமாவில் தனக்கான பெயர் கிடைக்கவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது.