சிவாஜி ரஜினி இணைந்து நடித்த 5 படங்கள்.. நேர்மைக்கு பெயர் வாங்கிய ஜஸ்டிஸ் கோபிநாத்

0
106

ரஜினி, சிவாஜியுடன் ஐந்து படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்.

Actor Sivaji Ganesan and Rajinikanth: சினிமாவில் வளர்ந்து வரும் காலங்களில் எப்படியாவது நமக்கு முன்னணியில் இருக்கும் பெரிய நட்சத்திரங்களுடன் ஒரு படத்திலாவது நடத்தி விட மாட்டோமா என்று பலரும் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். இந்த விஷயத்தில் ரஜினி கொடுத்து வைத்தவர் என்றே சொல்லலாம். ஏனென்றால் ஒரு படம் இல்லை ஐந்து படங்களில் சிவாஜி உடன் இணைந்து நடித்திருக்கிறார். அந்த படங்களைப் பற்றி பார்க்கலாம்.

ஜஸ்டிஸ் கோபிநாத்: டி யோகானந்த் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் கோபிநாத் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், கே ஆர் விஜயா, ரஜினிகாந்த், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சிவாஜி நேர்மையாக சட்டத்தை பின்பற்றும் நபராகவும், இவரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் ஒரு குழந்தை ரஜினிகாந்த். பின்பு இந்த குழந்தை தனியாக தவித்துக் கொண்டிருக்கும் நிலைமையை பார்த்து இவர் சொந்த மகனாக வளர்த்து வருவதை நோக்கி படம் நகர்ந்து வரும்.

நான் வாழ வைப்பேன்: டி யோகானந்த் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு நான் வாழவைப்பேன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கே.ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சிவாஜி கணேசன் செய்யாத கொலைக்கு ஜெயிலில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பார். இவரை காப்பாற்றும் விதமாக ரஜினி பல உதவிகளை செய்து வருவார்.

படிக்காதவன்: ராஜசேகர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு படிக்காதவன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், அம்பிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அண்ணனின் அரவணைப்பில் இருக்கும் தம்பிகள், அண்ணி வந்த பிறகு இவர்களுடைய நிலைமை எப்படி ஆகிறது என்றும், அதனால் தனியாக பிரிந்து எப்படி வாழ்கிறார்கள் என்பது வைத்து கதை நகர்ந்து வரும். இப்படம் ரஜினிகாந்த் சினிமா கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக வெற்றி பெற்றது.

விடுதலை: கே.விஜயன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு விடுதலை திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், விஷ்ணுவர்தன் மற்றும் மாதவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அப்போதைய காலத்தில் மிகுந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக திரையரங்குகளில் வெளிவந்தது. ஆனால் இதுவரை இவர்கள் தோற்காத அளவிற்கு இப்படம் படு தோல்வி அடைந்தது.

படையப்பா: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு படையப்பா திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இதில் ரஜினிகாந்தின் அப்பாவாக சிவாஜி கணேசன் நடித்திருப்பார். இப்படத்தில் குடும்பத்தில் இருப்பவர்கள் செய்த துரோகத்தினால் அதை தாங்கிக் கொள்ள முடியாத சிவாஜி உயிர் இழந்து விடுவார். பிறகு ரஜினிகாந்த் தனியாக இருந்த அவருடைய குடும்பத்தை எப்படி வழி நடத்தி வருகிறார் என்பதை வைத்து மீதம் உள்ள கதை நகரும்.