Saturday, April 19, 2025
Homeசெய்திகள்தேசிய விளையாட்டுப் போட்டியில் வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி 5 ஆவது முறையாக தங்கப்பதக்கம்.

தேசிய விளையாட்டுப் போட்டியில் வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி 5 ஆவது முறையாக தங்கப்பதக்கம்.

தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி 5 ஆவது முறையாக தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் 7 நகரங்களில், 38 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான வாள்வீச்சில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி, ஹரியானா வீராங்கனையை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஹரியானா வீராங்கனையை 15-க்கு 6 என்ற புள்ளி கணக்கில் பவானி தேவி வீழ்த்தினார். இதன் மூலம், தொடர்ந்து 5 ஆவது முறையாக, தேசிய விளையாட்டு போட்டியில், பவானி தேவி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments