Saturday, April 19, 2025
Homeசெய்திகள்ஈரோடு கிழக்கு தொகுதி ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு ஆரம்பம்.

ஈரோடு கிழக்கு தொகுதி ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு ஆரம்பம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று (பிப்.,08) காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்., கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் காலமானதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., பா.ஜ., தே.மு.தி.க., கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. காங்., தொகுதியை பறித்து, வி.சி.சந்திரகுமாரை வேட்பாளராக தி.மு.க., நிறுத்தியது. நா.த.க., சார்பில் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சைகள் என, 46 பேர் போட்டியிட்டனர். பிப்ரவரி 5ம் தேதி, அமைதியான முறையில் ஓட்டுப் பதிவு நடந்து முடிந்தது.

மொத்தம் 72% ஓட்டுக்கள் பதிவாகின. தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. அதிகமான ஓட்டுக்களை பெற்று வெற்றி பெறுவது யார்? என்பது மதியத்திற்குள் தெரியவரும்.

கடந்த 2023ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் 74.79 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இளங்கோவன்- 1 லட்சத்து, 10,156 ஓட்டும், அ.தி.மு.க., தென்னரசு, 43,923 ஓட்டும் பெற்றனர். வெற்றி வித்தியாசம், 66,233 ஓட்டாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments