Saturday, April 19, 2025
Homeசெய்திகள்விடாமுயற்சி முதல் நாள் வசூல்!

விடாமுயற்சி முதல் நாள் வசூல்!

நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளால் பல தாமதங்களைக் கடந்து நேற்று உலகம் முழுவதும் ரிலீஸானது. அவர் நடித்த ‘துணிவு’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸானது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ‘விடாமுயற்சி’ திரைப்படம் ரிலீஸாகியுள்ளது. படத்தில் அஜித்தோடு த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்க, லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கி இருந்தார்.

இதனால் அவரது ரசிகர்கள் இரண்டாண்டுகள் தங்கள் நாயகனை திரையில் பார்க்க முடியாத ஏக்கத்தை கொண்டாடித் தணித்தனர். வழக்கத்துக்கு மாறாக அஜித் இந்த படத்தில் அடக்கி வாசித்துள்ளார் என்று பாராட்டுகள் எழுந்தாலும், படத்தில் சுவாரஸ்யம் என்பது மருந்துக்கும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் சுமார் 25 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மிகப்பெரிய வசூல் எனக் கணக்கிடப்பட்டாலும் அடுத்தடுத்த நாட்களில் இந்த வசூல் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments