நம்ம நடிகர்களை ஓரம் கட்ட வரும் 5 அக்கட தேசத்து ஹீரோக்கள் ரசிகர்களைக் கவர்ந்த அல்லு அர்ஜுன்

0
147

சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்து தமிழ் நடிகர்களுக்கு தெலுங்கில் நடிக்கவும், தெலுங்கு நடிகர்களுக்கு தமிழில் நடிக்கவும் உள்ள ஆசை மட்டும் மாறாமல் இருக்கிறது. அப்போதைய காலத்தில் என்டிஆர் இல் இருந்து இந்த காலத்தில் உள்ள அல்லு அர்ஜுனா வரை நடித்துக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் அந்தக் காலம் போல இந்த காலத்தில் தெலுங்கு நடிகர்களை ரத்தின கம்பளம் போட்டு வரவேற்க ரசிகர்கள் ஆசைப்படுவதில்லை. அதையும் மீறி தெலுங்கு நடிகர்கள் தமிழில் வந்து நடித்திருக்கிறார்கள் என்றால் நம்ம தமிழ் நடிகர்களை ஓரம் கட்டுவார்களா என்று பார்ப்போம்.

நானி: இவர் ராஜமவுலி இயக்கத்தில் கிச்சா சுதீப், சமந்தா மற்றும் பலர் நடித்து 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நான் ஈ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகி நேரடியாக தமிழில் அறிமுகமானார். இவர் இந்த படத்தில் கொஞ்சம் சீனில் வந்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். அதன் பிறகு இவர் நடித்த தெலுங்கு படங்களில் இருந்து ஒரு சில படங்கள் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. ஆனால் அந்தப் படங்கள் ரசிகர்களிடம் சரியாக கொண்டு போய் சேர்க்காததால் இன்னமும் தமிழ் ரசிகர்களிடமிருந்து மார்க்கெட் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

பிரபாஸ்: இவர் ராஜமவுலி இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் நேரடியாக படமாக்கப்பட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2017 இல் பாகுபலி பார்ட் 2 வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றார். ஆனால் அதன்பிறகு அவர் நடித்த தெலுங்கு படத்தின் டப்பிங் படமான தமிழில் சாஹே, ராஜேஷ்யாம் படங்கள் தோல்வியை கொடுத்தன.

மகேஷ் பாபு: இவர் தெலுங்கு திரையுலகில் பிரின்ஸ் நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் பிறந்து வளர்ந்து படித்தது என்னமோ சென்னையில் தான். ஆனால் நடிகராக வளர்ந்தது தெலுங்கு படத்தின் மூலம். அதனாலையே இவருடைய மிகப்பெரிய ஆசை பிறந்து வளர்ந்த ஊரிலேயே மிகப்பெரிய நடிகராக வளர வேண்டும் என்பதுதான். அந்த ஆசையில் தான் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்பைடர் படத்தின் மூலம் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் இவருடைய ஆசை நிராசையாக போய்விட்டது. எதிர்பார்த்து அளவிற்கு ஸ்பைடர் படம் தெலுங்கு மற்றும் தமிழில் கை கொடுக்கவில்லை. இதனால் தெலுங்கில் சேர்த்து வைத்த கொஞ்சநஞ்ச இமேஜும் அந்த படத்தின் மூலம் காலி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு நல்ல தமிழ் திரைப்படங்களை பார்த்து பாராட்டுவதோடு இவருடைய ஆசையை நிறுத்திக் கொண்டார்.

அல்லு அர்ஜுன்: இவர் மற்றவர்களை போல் நேரடியாக தமிழ் படங்கள் மூலம் அறிமுகமாகாமல் புஷ்பா படத்தின் மூலம் டப்பிங் செய்யப்பட்டு தமிழில் அறிமுகமானார். 2021 இல் வெளிவந்த புஷ்பா படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அத்துடன் இவருக்கு நேரடியாக தமிழ் படங்களில் நடிப்பதற்கான ஆசை இல்லை. ஏனென்றால் மற்ற தெலுங்கு நடிகர்களை பார்த்து உஷாராகி விட்டார்.

நாக சைதன்யா: இவர் தெலுங்கு நடிகரான நாகேஸ்வர ராவ் பேரன் மற்றும் நாக அர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. இவர் மற்ற தெலுங்கு நடிகர்களை போல நாமும் எப்படியாவது தமிழில் கால் பதித்து விட வேண்டும் என்று மிகப்பெரிய ஆசையாக கனவு கோட்டை கட்டி இருந்தார். அந்த நேரத்தில் இவருக்கு கிடைத்த இயக்குனர் தான் வெங்கட் பிரபு. இவர்கள் இருவரும் சேர்ந்து கூட்டணியில் வெளிவந்த படம் கஸ்டடி. கடந்த மூன்று தினங்களுக்கு முன் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. இப்படம் இவருக்கு தமிழில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தவில்லை. விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தோற்றுப் போய் இருக்கிறார். இதற்கு மேலேயும் தமிழில் நடிக்க ஆசைப்படுவாரா என்று தெரியவில்லை. இவர் தாத்தா மற்றும் அப்பா போல தமிழில் தடம் பதிக்க முடியாமல் ஏமாந்து நிற்கிறார்.