நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு ஆறு வாரங்களுக்கு முன்பே இங்கிலாந்தில் படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கிவிட்டது.
தொடங்கிய வேகத்தில் டிக்கெட்டுகளும் மளமளவென விற்பனை ஆகி வந்தன. இந்நிலையில், இங்கிலாந்தில் ஜெயிலர் திரைப்படம் வசூல் செய்த தொகையை காட்டிலும் முன்பதிவு மூலமே அதிக வசூலை பெற்றிருக்கிறது லியோ திரைப்படம்.
அதற்கு அடுத்தபடியாக ஜெர்மனியில் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை லியோ திரைப்படம் முறியடித்து விட்டது.
ஜெர்மனியில் மட்டும் தற்போது வரை 2500 க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. இதன் மூலம் 68,500 யூரோக்களை லியோ திரைப்படம் வசூலித்து இருக்கிறது.
ஆனால் ஜெயலலிதா திரைப்படம் மொத்தமாக ஜெர்மனியில் வசூல் செய்த தொகை 66 ஆயிரத்து 141 யூரோக்கள் மட்டுமே. இதன் மூலம் முன்பதிவிலேயே ஜெர்மனியில் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை துவம்சம் செய்து அலப்பறை கிளப்பி இருக்கிறது லியோ திரைப்படம்.
ஜெர்மனியில் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் என்ற சாதனையை பொன்னியின் செல்வன் படைத்திருக்கிறது. இந்த திரைப்படம் 1 லட்சத்து 53 ஆயிரம் யூரோக்களை வசூல் செய்தது. இதற்கு அடுத்தபடியாக நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் இருக்கின்றது. மூன்றாவது இடத்தில் ஜெயிலர் திரைப்படம் இருந்தது.
ஆனால் ரிலீசுக்கு முன்பே அந்த மூன்றாவது இடத்தை தனதாக்கியிருக்கிறது லியோ திரைப்படம் மேலும் படம் வெளியான பிறகு முதல் இடத்திற்கு செல்லும் எனவும் கணிக்கப்படுகின்றது.