“நாக்கை நீட்டு.. ஸ்டாம்பை ஒட்டு..” – நைட் பார்ட்டியில் சீரழியும் நடிகைகள்..! – அதிர வைக்கும் தகவல்கள்..!

0
563

சமீபகாலமாக இளம் நடிகைகள் மத்தியில் நைட் பார்ட்டி கலாச்சாரம் என்பது ஏகபோகமாக பெருகி வருகிறது.

வரும் போது சீவி சிங்காரித்து வரும் நடிகைகள் திரும்பச் செல்லும் பொழுது அலங்கோலமான நிலையில் செல்வதை குறிப்பிட்ட ரிசார்ட், பப் போன்றவற்றில் பணியாற்றும் பவுன்சர்கள் youtube பேட்டிகளில் தங்களுடைய மோசமான அனுபவங்களை பகிர்வதை பார்த்திருப்பீர்கள்.இப்படியான நைட் பார்ட்டிகளில் மது, புகை தவிர வேறு எதுவும் அனுமதிக்க பயன்படுத்த அனுமதி இல்லை. மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகளுடன் தான் பப்கள், ரிசார்டுகள் மற்றும் போன்றவை இயங்குகின்றன.

ஆனால் மது மற்றும் சிகரெட் புகைப்பதில் பெரிய போதை இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் இன்றைய இளம் நடிகர், நடிகைகள். இதனால் அடுத்தடுத்த வஸ்துக்களை தேடி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.அந்த தேடுதலில் தற்பொழுது அவர்கள் கையில் சிக்கி இருக்க கூடிய ஒரு பொருள்தான் ஸ்டாம்ப். அதனை எடுத்து நாக்கில் ஒட்டி வைத்து விட்டால் போதும் வண்ணமயமான உலகத்திற்கு பயணப்படலாம் என்கிறார்கள்.பொதுவாக ரிசார்டுகளில் உள்ளே விற்பனை செய்யப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வெளியிலிருந்து வேறு எந்த போதை வஸ்துவையும் பயன்படுத்த எடுத்து வரவும் பயன்படுத்தவோ அனுமதி இல்லை.எனவே தீவிர பரிசோதனைக்கு பிறகு தான் நடிகைகள் நடிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். சோதனை என்றால் சாதாரண சோதனை கிடையாது. உள்ளாடையை கூட விடாமல் ஏதேனும் மாத்திரை அல்லது வேறு ஏதேனும் போதை வஸ்து பாக்கெட் இருக்கிறதா என்பதை  முற்றும் முழுதாக பரிசோதனை செய்துவிட்டு அதன் பிறகு தான் உள்ளே அனுப்புவார்கள்.இதனால் நடிகைகள் பலரும் வெளியில் கிடைக்கும் பிற போதை வஸ்துக்களை உள்ளே எடுத்துச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

ஆனால், தற்பொழுது போஸ்ட் கார்டில் ஒட்டக்கூடிய ஸ்டாம்ப் வடிவில் கிடைக்கக்கூடிய இந்த சிறு காகிதத்தை தலைமுடிக்குள் மறைத்து, செல்ஃபோன் பேக் கவரில் மறைத்து.. செருப்பில் ஒரு பேப்பர் போல ஒட்டிக்கொண்டு கூட எளிமையாக உள்ளே எடுத்துச் சென்று விட முடியும்.இந்த ஸ்டாம்ப் ஒட்டினால் 30 முதல் 45 நிமிடங்கள் கழித்து தான் வேலை செய்யும் என்பதால் கார் பார்க்கிங்கிலேயே இந்த ஸ்டாம்ப் ஒட்டிக்கொண்டு வாயில் வைத்தபடியே உள்ளே செல்லும் நடிகைகளும் இருக்கிறார்கள்.

இந்த கலாச்சாரத்தினால் நடிகைகள் சீரழிகிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும். ரிசார்ட் உரிமையாளர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த கலாச்சாரத்தை எப்படி நிறுத்துவது..? என்று தெரியாமல் விழிப்பிதுங்கி கிடக்கிறார்கள். இந்த ஸ்டாம்பை நாக்கில் ஒட்டிக் கொள்வதன் மூலம் ஒரு வண்ணமயமான புதிய உலகில் வசிப்பது.. புதிய ஜீவராசிகளுடன் வசிப்பது போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

மேலும், கதை, இசை குறித்த கற்பனைகள் கட்டுக்கடங்காமல் போகுமாம். எனவே இந்த அனுபவத்தை பெற போட்டி போட்டுக் கொண்டு இதனை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் சில திரை பிரபலங்கள்.

வேறு எப்போதும் இல்லாதவர்களுக்கு கடந்த ஒரு வருடங்களாக தான் இந்த கலாச்சாரம் தீவிரமாக நடிகைகள் மத்தியில் பரவி இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தாமல் விட்டால் பல்வேறு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறுகிறார்கள்.

இப்படியான போதை வஸ்துக்களை பயன்படுத்தும் பொழுது மூன்று மாடி உயரம் கூட ஒரு அடி போலத்தான் தெரியும். இதனை பயன்படுத்திவிட்டு மாடிமேல் நின்றால் ஒரு படி உயரம் தான் இருக்கிறது என்ற நினைப்பில் அவர்கள் இறங்க வாய்ப்பு இருக்கிறது.

ஒரு படி தான் என்று நினைத்துக் கொண்டு மூன்றாவது மாடியில் இருந்து இறங்கினால் என்ன ஆவது..? இப்படியான போதை வஸ்துக்களை பயன்படுத்தும் பொழுது உடற்கூறாவின் போது கூட இதனை இவர்கள் பயன்படுத்திருக்கிறார்கள் என்பது கண்டறிவது கடினமான விஷயமாம்.

இதனால், ரிசார்டுகளில் பார்ட்டி நடக்கும் இடங்கள் தரை தளங்களாகவே இருக்கின்றன. மேலும், யாரும் மாடிக்கு சென்று விடாதபடி கடுமையான பாதுகாப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஏதோ பார்ட்டி பப் என்று இருக்கிறார்கள் என்று பார்த்தால் இவர் உலகமே தனி உலகமாக இருக்கிறது. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதுன்னு தெரியல.. என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் விவரம் அறிந்த நண்பர்கள்.