இந்த நடிகைகள் அடிமையா இருந்தே போயிருக்காங்க.. – வெளிப்படையாக பேசிய நடிகை சங்கீதா..!

0
266

பிரபல நடிகை சங்கீதா தன்னுடைய வாழ்க்கை பக்கங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் புரட்டி இருக்கிறார் அதில் அவர் கூறியதாவது என்னுடைய பள்ளி கால நினைவுகள் எதுவுமே என்னுடைய நினைவில் இல்லை.

நான் 14 வயதில் என்னுடைய நடிப்பு பணியை ஆரம்பித்தேன். அப்போது முதல் என்னுடைய 27 வயது வரை என்ன நடந்தது..? ஏது நடந்தது..? என்று எந்த விஷயமும் என்னுடைய நினைவில் இல்லை.என்னுடைய குடும்பத்தினர் சொல்லக்கூடிய படங்களில் நடிப்பது அவர்கள் கொடுக்கக்கூடிய காசோலையில் கையெழுத்து இடுவது. படங்களில் ஒப்பந்தம் ஆவது..? படப்பிடிப்பு செல்வது.. இந்த படத்தில் நடித்தால் இவ்வளவு பணம் கிடைக்கும்..? அந்த படத்தில் நடித்தால் அவ்வளவு..? இப்படித்தான் நான் ஓடிக்கொண்டிருந்தேன்.

இது எனக்கு பிடிக்கவே இல்லை. நான் யாருக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்வியே என்னை நொறுக்கியது.நடிகை என்றால் இப்படித்தான் என்ற ஒரு பிம்பத்திற்குள் என்னை அடைக்கப் பார்த்தார்கள். என்னுடைய குடும்பத்தினர் என்னை வைத்து பணம் சேர்ப்பதை மட்டுமே குறியாய் வைத்திருந்தனர்.

என்னை ஒரு மனுஷியாக அவர்கள் மதிக்கவில்லை என்னை ஒரு ATM இயந்திரமாகத்தான் அவர்கள் பார்த்தார்கள்.என்னுடைய கணவரை நான் சந்திக்கும் வரை என்னுடைய வாழ்க்கை இப்படித்தான் சென்று கொண்டிருந்தது. நான் மட்டுமல்ல பல நடிகைகள் இப்படியான வாழ்க்கை சூழலில் சிக்கி கடைசி வரை அடிமையாக இருந்தே இறந்து போயிருக்கிறார்கள்.

ஆனால் நான் விழித்துக் கொண்டு தற்போது எனக்கு என்னுடைய கணவர் என்னுடைய குழந்தைகள் என வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதுவரை எனக்கு சந்தோஷம்.

என்னுடைய கணவர் எனக்கு உறுதுணையாக எனக்கு பக்கபலமாக என்னுடைய வாழ்க்கையில் ஒரு தூணாக என் அருகில் நின்று என்னை வழிநடத்தி இருக்கிறார். பொதுவாக நடிகைகள் என்றாலே இப்படித்தான் என்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி நடிகைகளுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. தனிப்பட்ட குடும்பம் இருக்கிறது. என்றெல்லாம் யாரும் யோசித்து கூட பார்ப்பது கிடையாது.

நடிகைகளை பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் வாய்க்கு வந்ததை கருத்து தெரிவிக்கிறார்கள். இவ அப்படி.. அவ இப்படி.. என்றெல்லாம் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்.

ஆனால் உண்மையில் அவர்கள் படும் கஷ்டம் அவர்களுக்கு தான் தெரியும். அது போல மோசமான சூழ்நிலையில் நான் இருந்தேன் அடிமையாக இருந்தேன் என்று தான் கூற வேண்டும்.

திருமணத்திற்கு பிறகு அந்த அடிமைத்தனத்திலிருந்து நான் வெளியே வந்தேன். அடிமையாகவே இருக்கும் அந்த நடிகைகள் பிறந்தது முதல் அடிமையாகவே இருந்து இறந்து போய் இருக்கிறார்கள் என்று பேசி இருக்கிறார் நடிகை சங்கீதா.