மோசமாக வர்ணித்த தாத்தா – நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ் கொடுத்த பதிலை பாருங்க..!

0
261

கடந்த 2013 ஆம் ஆண்டு சேட்டை என்ற திரைப்படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ்.

அதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வாயை மூடி பேசவும், புலிவால் என்ற திரைப்படங்களில் நடித்தார்.அதனை தொடர்ந்து இரும்புக்குதிரை, நம்பியார், இந்ரஜித், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மட்டுமில்லாமல் சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் போட்டியாளராகவும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறார் நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் உங்களுக்கு வந்த மோசமான ப்ரொபோஸல்கள் ஏதேனும் இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த நக்‌ஷத்ரா நாகேஷ், ஒரு முறை ஒரு தாத்தா என்னை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டார்.என்னுடைய நடிப்பு என்னுடைய நிகழ்ச்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று கூறினார். நானும் நன்றி என அவருக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் என்னுடைய அழகை வர்ணிக்க ஆரம்பித்தார்.

அவருடைய வயதுக்கும் அவர் பேசுவதற்கும் சம்பந்தமே இல்லை. அதன் பிறகு நீங்கள் என் கனவில் வருகிறீர்கள்.. என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அவருடைய பேச்சுகள் எல்லை மீறி போனது.

இதனால் அவரை பிளாக் செய்து விட்டேன். மோசமான நபர் என்றாலே எனக்கு டக்கென நியாபகம் வருவது அந்த தாத்தா தான் அந்த தாத்தா நிஜமாகவே தாத்தா தானா அல்லது வேறு யாரேனும் அவருடைய புகைப்படத்தை வைத்துக்கொண்டு இப்படி ஏமாற்றினார்களா என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் மோசமான ஒரு நபர் என்று கேட்டால் உடனடியாக தாத்தா நினைவுக்கு வந்து விடுகிறார் என்று கூறியிருக்கிறார்.