தீயாய் பரவிய புகைப்படம்..! – அது எடிட் செய்யப்பட்டது என சாய் பல்லவி விளக்கம்..! – இதோ புகைப்படம்..!

0
334

பொதுவாக சினிமா நடிகைகள் இன்னாரை திருமணம் செய்து கொண்டார் என்று அடிக்கடி வதந்திகள் கிசுகிசுக்கள் பரவுவது வாடிக்கை.

சில சமயங்களில் புகைப்பட ஆதாரத்துடன் இப்படியான தகவல்கள் வெளியாகும். குறிப்பாக பைரவா திரைப்படத்தின் பூஜையின் போது நடிகை கீர்த்தி சுரேஷ் காமெடி நடிகர் சதீஷ் ஆகியோர் வரும் மாலை அணிந்து கொண்டு அருகருகே நின்று கொண்டிருந்த புகைப்படங்களை எடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று வதந்தியை பரப்பினார்கள்.

அப்போது கீர்த்தி சுரேஷ் இது குறித்து விளக்கம் கொடுத்திருந்தார். நடிகர் காமெடி நடிகர் சதீஷ் இது நிஜமாக இருக்கக் கூடாதா..? என்று தன்னுடைய பாணியில் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அப்பொழுது படப்பிடிப்பின் படப்பிடிப்பின் பூஜையின் பட துவக்க நாளின் படத்தின் பூஜையின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எடுத்து நடிகை சாய் பல்லவி இவரை திருமணம் செய்து கொண்டார் என்று ஒரு தகவல் இணையத்தில் தீயாக பரவி வந்தது.

பொதுவாக இப்படியான விஷயங்களுக்கு சாய் பல்லவி பதில் கொடுப்பது கிடையாது. ஆனால் இந்த முறை பதில் கொடுத்து இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை நிஜம் என்று நம்பிய சாய்பல்லவியின் உறவினர்கள், நண்பர்கள் சிலர் அவரையும் அவருடைய குடும்பத்தினரையும் தொடர்பு கொண்டு விஷயம் கேட்டிருக்கின்றனர்.

இது நேரடியாக அவருடைய குடும்பத்தை பெரிய சிக்கலில் சிக்க வைத்திருக்கிறது. இந்நிலையில், சாய்பல்லவி இது குறித்து பதிலை எழுதி இருக்கிறார்.

பொதுவாக நான் இப்படியான விஷயங்களை பதில் கொடுக்க மாட்டேன். ஆனால் ஒரு விஷயம் என்னுடைய குடும்பத்தை பாதிக்கிறது என்னும்போது நான் பேசாமல் இருப்பதில் நியாயம் கிடையாது.

இப்படியான கேவலமான விஷயங்களை செய்வத நிறுத்திக் கொள்ளுங்கள். இந்த புகைப்படத்தை எடிட் செய்து நான் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் பரப்பி இருக்கிறார்கள். இந்த தகவல் போலியானது என்று தன்னுடைய மறுப்பை பதிவு செய்திருக்கிறார் நடிகை சாய் பல்லவி.