நடிகை சமந்தா தன்னுடைய முன்னாள் கணவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் பதிவிட்டு இருக்கிறார்.
தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சமந்தா நடிகர் நாகசைதன்யாவை காதலித்து வந்தார். இருவரும் பரஸ்பரம் காதலித்து வந்த நிலையில் முதலில் இவர்களுடைய வீட்டில் இதற்கு எதிர்ப்பு நிலவியது.அதன் பிறகு, தனியாக வீடு எடுத்து இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். விஷயத்தை தெரிந்துகொண்ட நாகசைதன்யா-வின் குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
திருமணம் முடித்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் இடையில் நாங்கள் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.அதன் பிறகு இருவரும் சேருவதற்கு உண்டான முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முன்னாள் கணவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை மீண்டும் பதிவிட்டு இருக்கிறார்.
இதன் மூலம் நடிகை சமந்தா நாகசைதன்யா இருவரும் மீண்டும் சேர்வார்களோ..? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.
மறுபக்கம் தொலைக்காட்சி பேட்டியின் போது நடிகை சமந்தா விடம்உங்கள் முன்னாள் கணவர் நாகசைதன்யாவை நீங்கள் சந்திக்கிறீர்கள்..? அப்போது என்ன செய்வீர்கள்..? அந்த நேரத்தில் உங்களுடைய செயல்கள் எப்படி இருக்கும்…? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நடிகை சமந்தா, ஒருவேளை நானும் நாகசைதன்யாவும் சந்திக்க வேண்டும் என்றால் முதலில் அந்த இடத்தில் இருக்கக்கூடிய கூர்மையான பொருட்களை நீங்கள் மறைத்து வைத்து விட வேண்டும் என்று பேசியிருந்தார்.
இந்த அளவுக்கு கோபமாக பேசிய சமந்தா தற்பொழுது தன்னுடைய கணவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு இருப்பது பெரும் பேசும் பொருளாகி இருக்கிறது.