அந்த 2 மணி நேரம்.. ரூமில் இருந்த மாத்திரைகள்.. விஜய் ஆண்டனி மகள் குறித்து பயில்வான் கூறிய தகவல்..!

0
958

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் சமீபத்தில் தன்னுடைய அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை கிளம்பி இருக்கிறது. இந்நிலையில், இவர் குறித்த தகவல்களும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில், நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, நடிகர் இயக்குனர் இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர் மூத்த மகள் மீரா இளைய மகள் லாரா மூத்த மகள் தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் நடந்த அன்று அதிகாலை 3 மணி அளவில் கண்விழித்த விஜய் ஆண்டனி தன்னுடைய மகளின் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜய் ஆண்டனி கதறி அழுது இருக்கிறார். பின்னால் தனது உதவியாளர் உதவியுடன் மகளை மட்டும் கீழே மகளை மீட்டு கீழே இறக்கி உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனை அழைத்து சென்று இருக்கிறார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.விஜய் ஆண்டனி மக்கள் படிப்பில் கெட்டிக்கார மாணவி. சர்ச் பார்க் பள்ளியில் படித்து வருகிறார். அவருடைய இறப்பு செய்தி அறிந்த சக மாணவிகள் ஆசிரியர்கள் இதனை நம்ப முடியாமல் இருக்கின்றனர்.தைரியமாக பேசக்கூடிய பழகக்கூடிய பெண்ணாக இருந்திருக்கிறார் மீரா. நன்கு படிக்கக்கூடியவர்.. நல்ல மார்க் எடுக்க கூடியவர்.. முதல் மாணவியாக இருந்திருக்கிறார்.. பள்ளி சார்ந்த பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

நான்கு மணி நேரம் விஜய் ஆண்டனியின் மகளுடைய உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இதில், சந்தேகத்திற்கிடமான எந்தவிதமான தடயங்களும் தென்படவில்லை.

அதனால், மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. உடற்கூறாய்வு செய்து அறிக்கை பெற்ற பின்னர் மகளின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்த விஜய் ஆண்டனி கதறி அழுதார்.

பிரேத பரிசோதனையில் சந்தேகத்திற்கு இடமாக எந்த விஷயமும் இல்லை என்பதை உறுதி செய்த போலீசார் அவருடைய அறையை சோதித்த போது அவர் மன அழுத்தத்திற்காக எடுத்துக் கொண்டிருந்த மாத்திரைகள் இருந்திருக்கின்றன.

அவருடைய கைப்பேசியை சோதித்த போது அதிலும் சந்தேகத்திற்குரிய எந்த விஷயங்களும் இல்லை. நள்ளிரவு ஒரு மணி அளவில் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டு தூங்க சென்று இருக்கிறார் மீரா.

ஆனால், அந்த இரண்டு மணி நேரத்தில் என்ன நடந்தது..? என்று தெரியவில்லை. மூன்று மணிக்கு தவறான முடிவை எடுத்து கொண்டிருக்கிறார். உடற்கூறாய்வுக்கு பிறகு மகளின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய விஜய் ஆண்டனி பார்த்தபோது என் உடலெல்லாம் நடுங்கியது.

இந்த கஷ்டமான விஷயத்தை பேசும்போதே நாக்கு தழுதழுக்கிறது விஜய் ஆண்டனி போல ஒரு நல்ல மனிதருக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் படப்பிடிப்பில் ஒரு விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து அவர் மீண்டு வருவதற்குள் தற்போது இப்படி ஒரு சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று பேசி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.