Saturday, April 5, 2025
Homeசெய்திகள்ஜப்பானில் சிறையில் இருக்க வேண்டுமென்றே குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் மூதாட்டி.

ஜப்பானில் சிறையில் இருக்க வேண்டுமென்றே குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் மூதாட்டி.

ஜப்பானில் 81 வயதான அகியோ என்ற பெண், சிறையில் தங்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்த சம்பவம் ஜப்பான் நாட்டின் வளர்ந்துவரும் வயதான மக்கள்தொகை நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது. இவர் தனது 60வது வயதில் உணவைத் திருடியதற்காக முதலில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தனது ஓய்வூதியத்தில் உயிர் வாழ்வது கடினமாக இருந்த காரணத்தால் மீண்டும் மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டு சிறை சென்று வருகிறார்.

டோக்கியோவின் வடக்கே அமைந்துள்ள ஜப்பானின் மிகப்பெரிய பெண்கள் சிறைச்சாலையான டோச்சிகி பெண்கள் சிறைச்சாலைக்கு அகியோ அனுப்பப்பட்டார். இந்த சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 500 கைதிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வயதானவர்கள். இது ஒரு சிறிய பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்துதான் கடைகளில் திருடியதாக அகியோ ஒப்புக்கொண்டாலும், அவரது பணப் பிரச்சனைகள் காரணமாக வேறு வழியின்றி திருட ஆரம்பித்துள்ளார். “நான் வசதியான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தால் நிச்சயமாக அதைச் செய்திருக்க மாட்டேன்” என்று அகியோ கூறுகிறார்.

சிறையில் தான் அனுபவித்த வாழ்க்கை குறித்தும் சிந்தித்துப் பார்த்த அகியோ வெளியே தனியாக இருப்பதைவிட அங்கு வாழ்வது மிகவும் நிலையானதாக உணர்ந்ததாகக் கூறுகிறார். “சிறையில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை இந்த வாழ்க்கைதான் எனக்கு மிகவும் நிலையானதாக இருக்கலாம்” என்று அவர் கூறுகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments