அதுக்கு வயசு இல்லை.. இது தான் முக்கியம்..! – ரொமான்ஸ் குறித்து ஓப்பனாக பேசிய ரம்யா கிருஷ்ணன்..!

0
293

நடிகை ரம்யா கிருஷ்ணன் சினிமாவில் அறிமுகமான பதிவில் தன்னைவிட 20, 30 வயது அதிகமான நடிகர்களுக்கு ஜோடியாக, ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும்போது மிகவும் கூச்ச பட்டதாகவும் ஒரு விதமான அருவருப்பு தன்மையை உணர்ந்ததாகவும் கூறினார்.

தன்னுடைய அப்பா வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்ய வேண்டுமா என்று யோசித்தேன். ஆனால் ஒரு திரைப்படத்தில் பல்லை கடித்து கொண்டு நடித்தேன்.

அதனை ஒரு படமாக பார்க்கும் பொழுது இந்த வயது வித்தியாசம் எல்லாம் பெரிய விஷயமாக தெரியவில்லை. எனவே, அப்போதுதான் முடிவு செய்தேன்.

நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்வதற்கு வயசு முக்கியம் கிடையாது. படத்தின் கதையும் நம்முடைய திறமையும் தான்.

அதன் பிறகு அடுத்த அடுத்த படங்களில் படத்தின் கதை மட்டும் தான் கேட்டேன் வயது வித்தியாசம் பார்க்காமல் தைரியமாக நடித்த என் படங்கள் அனைத்துமே மிக நன்றாக வந்தன.

சில நேரங்களில் என்னை விட வயது அதிகமான 20, 30 வயது அதிகமான நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்திருக்கிறேன்.

அதே நேரம் என்னை விட வயது குறைவான நடிகர்களுடனும் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறேன்.

எனவே சினிமாவில் ரொமான்ஸுக்கு வயதே கிடையாது திறமை தான் முக்கியம் என பேசி இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.