நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.
இதனை தொடர்ந்து நடிகை மீனா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்களின் பெயர் அடிபட்டது.
அதில் முக்கியமான ஒரு தகவல் என்றால் நடிகை மீனா நடிகர் தனுஷை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் தான்.
இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர் எனது நடிகை மீனா தனுஷை திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா..? என்று ஷாக் ஆகினர்.அதற்கு ஏற்றார் போல் நடிகர் தனுஷும் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தார். என்னடா இது என்று பலரும் குழம்பித்தான் போனார்கள்.
ஆனால் நடிகை மீனாவுக்கும் நடிகர் தனுஷுக்கும் திருமணம் என்பது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் கதை என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர்.
இதனால் இந்த விவகாரம் சற்று அடங்கியது. இந்நிலையில், நடிகை மீனாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது நடிகர் ரஜினிகாந்த் எனக்கு அப்பா போன்றவர்.
ஆனால் அவருடைய மருமகனை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று தகவல்கள் வெளியாகி இருப்பது போலியான தகவல், வேதனை அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.