பிரபல நடிகை கிருஷ்ண பிரியா மோகன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலம் ஆனார்.
அதன் பிறகு சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படத்தில் நடிகை அனுஷ்காவின் தங்கையாக நடித்திருக்கிறார்.இடையில் இயக்குனர் அட்லியை திருமணம் செய்து கொண்டார். படித்து முடித்த நாள் முதல் மீடியாவில் சாதிக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் மீடியா துறையின் மீது தன்னுடைய முழு காதலையும் வைத்திருந்திருக்கிறார் பிரியா.
ஒரு முறை ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த இயக்ககுனர் அட்லி நடிகை பிரியாவைப் பார்த்து இருக்கிறார். அதனை தொடர்ந்து காதலை ரகசியமாக வைத்துக் கொண்டு தன்னுடைய குறும்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான குறும்படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்திருந்தார் பிரியா. இப்படியே அவர்களுடைய காதல் நகர்ந்து கொண்டிருந்தது.திடீரென ஜிவி பிரகாஷ் அட்லி மற்றும் பிரியா இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள் என்ற புகைப்படம் பதிவிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை பதிவு செய்திருந்தார்.
இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்னது அட்லீயும் பிரியாவும் திருமணம் செய்து கொள்ள போகிறார்களா..? என்று வியந்தனர்.
மேலும், அட்லி பிரியா இருவரும் அருகருகில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது.
இப்படி திருமணத்திற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாவது சரி அல்ல. என்று தங்களுடைய வீட்டில் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்.
திரைப்படங்கள் இயக்கி வாழ்க்கையில் செட்டிலான பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருந்த இயக்குனர் அட்லி இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதால் மேற்கொண்டு காலம் தாழ்த்தாமல் திருமணம் செய்து கொள்வது தான் நல்லது என திடீர் திருமணம் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.