அந்த நேரத்தில் கூட அது பண்ணோம்..! – கூச்சமே இல்லாமல் போட்டு தாக்கிய காஜல் அகர்வால்..!

0
253

நடிகை காஜல் அகர்வால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாக இருந்தார்.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக காஜல் அகர்வால் வலம் வந்து கொண்டிருந்த காலம் அது.

இந்த தகவல் குறிப்பிட்ட ஆணுறை நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன.

ஏற்கனவே நடிகை சன்னி லியோன் நடித்திருந்த ஆணுறை விளம்பரத்தை பொதுமக்கள் சிறுவர்கள் அதிகம் கூடக்கூடிய மெட்ரோ ரயில், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், இன்ன பிற பொது இடங்களில் பிரசுரம் செய்திருந்தனர்.

பேனர் வைத்திருந்தனர், லைட் பாக்ஸ்கள் வைத்திருந்தனர், ஸ்டிக்கர்கலாக ஒட்டி வைத்திருந்தனர். இதெல்லாம் பார்க்கக் கூடிய குழந்தைகள் ஒரு வித தேடலுக்கு உந்தப்படுவார்கள்.

அந்த தேடுதல் அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற வாய்ப்பு இருக்கிறது என்றும் இளம் பெண்கள், இளைஞர்கள் அதிகம் வரக்கூடிய இடங்களில் ஆணுறை குறித்த விளம்பரம் சங்கோஜமான, ஒரு கடினமாக மனநிலையை ஏற்படுத்துகிறது பொதுமக்களிடமிருந்து கடுமையான கண்டன குரல்கள் எழுந்தன.

இதனை தீவிரமாக எடுத்துக் கொண்ட அரசு பொது இடங்களில் மோசமான வகையில் விளம்பரங்கள் இருக்கக் கூடாது. பொதுமக்கள் அதிகம் கூட கூடிய இடங்களான திரையரங்குகள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில் உள்ள பகுதிகள், பள்ளிகள் உள்ள பகுதிகள் என குழந்தைகளும் பெரியோர்களும் அதிகம் வரக்கூடிய இடங்களில் ஆணுறை விளம்பரங்கள் இடம் பெறக் கூடாது என்று என்றும் தொலைக்காட்சிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆணுறை விளம்பரங்கள் ஒளிபரப்ப கூடாது என்றும் ஆணை பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து பல்வேறு நடிகைகள் இதற்கு எதிராக கண்டன குரல்களை கொடுத்தனர். அதில் நடிகை காஜல் அகர்வாலும் ஒருவர்.

அந்த நேரத்தில் அவர் பேசியதாவது, ஆணுறை விளம்பரத்திற்கென்று ஒரு நேரத்தை ஒதுக்கி இருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இரவு 10 மணியிலிருந்து விடியற்காலை 6 மணி வரை தான் அந்த விளம்பரத்தை ஒளிபரப்ப வேண்டுமாம்.

ஆனால், பகல் நேரத்தில் கூட உடலுறவு கொள்கிறார்கள்.. மாலை நேரத்தில் உடலுறவு கொள்கிறார்கள்.. அப்படி இருக்கும் பொழுது இரவு நேரத்தில் மட்டும் தான் ஆணுறை விளம்பரம் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் ஆணுறை என்பது மிகப்பெரியது. ஆனாலும் இதன் பின்னால் சில காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். அதனை நான் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன் என பதிவு செய்திருக்கிறார்.