அது போட்டாலும் எனக்கு தண்ணி வராது..! – லவ் டுடே இவனா ஓப்பன் டாக்..!

0
259

நடிகை இவானா கடந்த 2000 ஆம் ஆண்டு கேரள மாநிலம் அலுவாவில் பிறந்தவர். தற்போது 23 வயது ஆகும் இவருடைய உண்மையான பெயர் அலீனா ஷாஜி என்பதாகும்.

கடந்த 2012 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான மாஸ்டர்ஸ் என்ற திரைப்படத்தில் தக்ஷா என்ற கதாபாத்திரத்தின் சிறு வயது கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

தன்னுடைய 12 வயதிலேயே சினிமாத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த இவர் தமிழில் நாச்சியார் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து ஹீரோ திரைப்படத்தில் நடித்திருந்தார். லவ் டுடே திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

சமீபத்தில் வெளியான LGM திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மட்டுமில்லாமல் கள்வன், காம்ப்ளக்ஸ், செல்ஃபிஷ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை இவானா படப்பிடிப்பு தளங்களில் கிளிசரின் போட்டாலும் என்னுடைய கண்ணுல தண்ணி வரவே வராது.

பொதுவாக கிளிசரினை காது குடையும் பட்ஸ்சில் எடுத்து கண் ஓரமாக வைப்பார்கள். ஆனால், எனக்கு நேரடியாக கிளிசரினை கண்ணில் போட்டாலும் கண்ணில் இருந்து தண்ணி வரவே வராது.

என்னுடைய மூக்கில் இருந்து தான் தண்ணி வரும். ஒரு நாள் கிளிசரினை நேரடியாக கண்ணில் சொட்டு சொட்டாக விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கிளிசரின் போட்டால் தான் கண்ணு தண்ணி வரும்.. ஐ ட்ராப்ஸ் போட்டால் எப்படி வரும்…? என்று சண்டை போட்டார்.

நான் கிளிசரினை தான் ஐ-ட்ராப்ஸ் போல தான் போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று அவருக்கு தெரியாது என கூறியிருக்கிறார் நடிகை இவானா.