பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான மாரிமுத்துவின் மரணம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது.
நேற்று செப்டம்பர் 8 காலை 8:30 மணி அளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் மாரிமுத்து. இன்று செப்டம்பர் 9 அவருடைய சொந்த ஊரில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவருடைய மகன் மீடியாவினரை ஊடகத்துறையினரை சந்தித்து தன்னுடைய தந்தையின் அந்த இறப்பு செய்தியை அறிவித்தது மட்டுமில்லாமல் எங்களுடன் இருந்து எங்களுக்கு துணையாய் நின்ற மீடியா துறையினர் அனைவருக்கும் நன்றி என்ற தெரிவித்துக் கொண்டார்.
அதன் பிறகு தொடர்ந்து பேசிய அவர் என்னுடைய தந்தைக்கு உயிர் என்பது சினிமா தான். எப்போதும் சினிமா காட்சிகள் திரைக்கதை இது போன்ற விஷயங்களில் தான் கவனமாக இருப்பார்.
அவரை விடவும் அவருக்கு மிகப்பெரிய விஷயம் ஒன்று இருக்கிறது என்றால் அது சினிமா தான். அது சீரியலாக இருக்கட்டும் திரைப்படமாக இருக்கட்டும் திரையில் தோன்றுவது நடிப்பதுதான் அவருடைய மூச்சாக இருந்தது.
சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சி எடுத்து இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதற்குண்டான பலனை அவர் பெற்றுக் கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் அவருடைய உயிர் பிரிந்தது ஒரு வகையில் சந்தோஷமான விஷயம் தான் என்று வேதனையுடன் பதிவு செய்துள்ளார். அவருக்கு உண்டான அவருடைய திறமைக்குண்டான மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிட்டது.
இது கிடைக்காமல் இருந்திருந்தால் தான் கஷ்டமாக இருந்திருக்கும். அவர் தன்னை சினிமா ரசிகர்களுக்கு நிரூபித்து விட்டு தான் மறைந்திருக்கிறார். அந்த வகையில், அவருடைய இந்த நேரத்தில் அவர் மரணம் அடைந்திருப்பது சந்தோஷமான விஷயமாக நான் பார்க்கிறேன்.
எங்களுடன் துணையாக நின்ற அனைத்து மீடியா துறையினருக்கும் மிகவும் நன்றி என்று தன்னுடைய நன்றிகளை பதிவு செய்திருக்கிறார் மாரிமுத்துவின் மகன்.