நடிகை சோனாலி பிந்த்ரே(Actrees Sonali Bendre) சிறந்த நடிகையாக, சினிமா ரசிகர்களால் அறியப்பட்டவர். மாடல் துறையில் இருந்தவர்.
காதலர் தினம் படத்தில், குணால் இவரை பார்த்து பாடும் என்ன விலை அழகே, சொன்ன விலைக்கு வாங்க வருவேன், விலை உயிர் என்றாலும் தருவேன், இந்த அழகை கண்டு வியந்து போகிறேன், சொல்ல மொழியின்றி மூர்ச்சை ஆகிறேன் என பாடி இருப்பார்.
அந்த பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில், அந்த பாடல் காட்சியில் சோனாலி செம அழகில், ரசிகர்களை கவர்ந்திருப்பார்.
இவரை பாலிவுட் நாயகி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இவர் இந்தியில் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி படங்களில் நடித்திருந்தாலும், இந்தியில் இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சோனாலி பிந்த்ரவுக்கு இப்போது, 48 வயது ஆகிறது. ஆனால், பார்வைக்கு இன்னும் இளமையான நாயகியாகவே தோற்றமளிக்கிறார். இவரது சொந்த ஊர் மும்பை, மகாராஷ்டிரா தான். சோனாலிக்கு, கடந்த 2002ம் ஆண்டில், திருமணமானது.
திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் கோல்டி பெல் என்பவரை கணவராக ஏற்றுக்கெொண்டார்.
இவர்களுக்கு 2005ம் ஆண்டில், ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சோனாலி ரன்வீர் என பெயரிடப்பட்டது.
கடந்த 1995ம் ஆண்டில், சோனாலிக்கு பிலிம்பேர், லக்ஸ் புதுமுக விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
சோனாலி பிந்த்ரே, தனது இளமை காலத்தில் பெங்களூரு, மும்பை பள்ளிகளில் படித்தவர். படிப்பை முடித்த பின் மாடலிங் துறையில் அழகியாக வலம் வந்தார்.
கடந்த 1994ம் ஆண்டில் ‘ஆக்’ என்ற படத்தில், நடிகர் கோவிந்தாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து பாய், முராரி, சர்பரோஷ், ஜம்ஹம், டூப்ளிகேட், தேரா மேரா சாத் ரஹே, அனாஹட் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதில், நல்ல நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதில் சில படங்களும் மெகா ஹிட் படங்களாக அமைந்தன
இவர் அமீர்கான், ஷாருக்கான், சைப்கான், சல்மான் கான் என நான்கு முன்னணி கான் நடிகர்களுடனும்தான் நடித்தவர். மேலும், பாலிவுட்டின் ஸ்டார் நடிகர்களான அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி, அஜய்தேவ்கன், சஞசய் தத், அனில்கபூர் போன்றவர்களுடனும் சோனாலி பிந்த்ரே நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சோனாலி பிந்த்ரோ மிகச்சிறந்த டான்ஸர் என்று பாராட்டுகளை பெற்றவர். பல படங்களில், இதை வெளிப்படுத்தி, ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்றவர்.
குறிப்பாக கத்தார், சபூட், பம்பாய், லஜ்ஜா மற்றும் மேஜர் சாப் போன்ற படங்களில் இவரது நடனம், அபாரமாக இருந்ததாக, ரசிகர்கள் இன்றும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆப் கி சோனியா என்ற அரங்க நாடகத்தில் நடித்தவர் என்ற பெருமை சோனாலிக்கு உண்டு.. கியா மஸ்தி கியா தூம் என்ற டிவி நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் சோனி டிவியில் ஐடாலின் நடுவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்ஸ் புதுமுக நடிகை பிலிமபேர் விருது, அனில் கபூர் ஐஸ்வர்யா ராய் நடித்த ஹமாரே தில் ஆப்கே பாஸ் ஹே படத்தில் சிறந்த நடிப்புக்கான, சிறந்த துணை நடிகை விருது பெற்றார். நட்சத்திர திரை விருது, சிறந்த நடிகைக்கான இந்த விருது மராத்தி படமான அனாஹட், இவருக்கு பெற்றுத் தந்தது.
தமிழில், நடிகர் குணால் உடன் சோனாலி நடித்த படம் காதலர் தினம். தமிழ் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. இந்த படத்தின் பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்தன. தொடர்ந்து, கண்ணோடு காண்பதெல்லாம் படத்தில், இவர் நடித்தார். இந்த படம், பெரிய அளவில் பேசப்படவில்லை.
கடந்த 2018ம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி பிந்த்ரே பின், அந்த நோயை எதிர்கொண்டு வென்று, பூரண குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.