
சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஹரி கைது. காவல் உதவி ஆய்வாளர் மீது கத்தியால் குத்தி தப்பிய போது, அவர் கால் முட்டியில் சுட்டு பிடிக்கப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலையத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். காவல் நிலையத்தின் நுழைவு வாயில் இரும்பு கேட் மூடப்பட்டிருந்ததால் இந்த நிகழ்வில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை காவல்துறையினர், காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 10 நபர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் தலைமையிலான போலீஸார் தொடர்ந்து விசாரணையும் நடத்தி வந்தனர். அதன்படி காவேரிப்பாக்கம் அருகே போலீஸார் தனிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஹரி என்பவரை காவல்துறையினர் பிடிக்க முற்பட்டுள்ளனர். ஆனால் ஹரி, காவல் உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.