நடிகை அதிதி சங்கர் தன்னுடைய அப்பாவால் தான் இழந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேட்டிஒன்றில் வேதனை தெரிவித்திருக்கிறார்.
அது வேற எதுவும் கிடையாது பெரிய இயக்குனரின் மகள் என்ற விஷயம் தெரிந்ததால் என்னிடம் யாரும் காதல் வெளிப்படுத்தவே இல்லை யாருமே என்னிடம் ப்ரபோஸ் செய்யவில்லை என குமுறி இருக்கிறார்.என்னுடைய அப்பாவால் இதனை நான் இழந்து விட்டேன் என பேசியிருக்கிறார். மேலும் காதலித்து திருமணம் செய்து கொள்வீர்களா..? அல்லது வீட்டில் பார்த்து வைக்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் கூறியதாவது, கண்டிப்பாக வீட்டில் பார்த்து வைக்கும் மாப்பிள்ளை தான் நான் திருமணம் செய்து கொள்வேன்.திருமணம்பெரியோர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம் இதில் நான் முடிவு செய்ய எதுவும் இல்லை என பேசி இருக்கிறார் நடிகை ஆதிதி சங்கர்