நடிகை கனகா குறித்து பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.நடிகை கனகா ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். பல்வேறு நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஆனால் கமல்ஹாசனுடன் மட்டும் நடிக்கவில்லை.
கமல்ஹாசனுடன் நடித்தால் லிப்லாக் முத்த காட்சி கொடுத்தே ஆகவேண்டும் என்ற ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது.எனவே கனகா கமல்ஹாசன் உடன் நடிக்க மாட்டார் என்று அவருடைய தாய் முட்டுக்கட்டை போட்டார். அவருடைய தாய் சொன்னபடியே கமலஹாசனின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதனை தவிர்த்தார் நடிகை கனகா.
ஒரு கட்டத்தில் ஒருவரை காதலிக்க தொடங்கிய நடிகை கனகா அவருடன் தனிமையில் இருந்தார். அவருடன் வெளிநாடு சென்று செட்டிலானார். திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார்.கனகாவின் வாழ்க்கையே காதலனால் காவு வாங்கப்பட்டது,
யார் அந்த காதலர் என்று இந்து நாள் வரை வெளியே தெரியாமல் இருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்தியா திரும்பிய அவர் தன்னுடைய அம்மாவுடைய வீட்டில் தான் வசித்து வருகிறார்.
வெளியில் வருவது கிடையாது, யாருடனும் பேசுவது கிடையாது, புத்தி பேதலித்தது போல இருக்கிறார், மீடியா வெளிச்சத்திற்கு வருவது கிடையாது, அப்படியே வந்தாலும் முன்னுக்கு பின் முரணான விஷயங்களை தான் பேசுகிறார்.
ஒருமுறை அவருடைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வந்த தீயணைப்பு வீரர்களை கூட தடுத்து உங்களுக்கு இது தேவையில்லாத வேலை என்று துரத்த பார்த்தார்.
ஆனால் அதை எல்லாம் தாண்டி தீயணைப்பு இவர்கள் அவருடைய வீட்டில் தீயை அணைத்தனர்.
இவர்கள் வீட்டில் அடிக்கடி பிரச்சினைகள் வருவதும் கைகலப்பாகிக் கொள்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
அதனை, ஒவ்வொரு முறையில் போலீசார் வந்து சமாதானம் செய்துவிட்டு செல்கின்றனர். இப்படி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை கனகாவின் வாழ்க்கை தற்பொழுது தலைகீழாக மாறி இருக்கிறது என்று பேசி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.