2025ம் ஆண்டு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த புத்தாண்டில் ஒவ்வொரு ராசியை சேர்ந்தவர்களும் எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், யாருக்கெல்லாம் அனுகூலமும், நன்மைகளும் அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்வதோடு, பிரச்சினைகளை நுண்ணறிவுடன், சரியான பரிகார, வழிகாட்டுதல்களுடன் கடப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.

2025ம் ஆண்டில், ஜனவரி 17ம் தேதி புதன் பகவான் தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆவதன் மூலம் தொடங்கி, டிசம்பர் 29ல் மீண்டும் தனுசுவில் புதன் நுழைவதோடு முடிவடைகிறது. இந்த ஆண்டில் முக்கிய கிரகங்களான குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு – கேது பெயர்ச்சிகள் அடுத்தடுத்து நடக்க உள்ளன. கிரகங்களின் இந்த மாற்றத்தால், 12 ராசிகளுக்கு தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில், வேலை தொடர்பான விஷயங்களில் முன்னேற்றமும், பாதிப்பும் கலந்தே இருக்கும்.
அதிலும் குறிப்பாக சனி – ராகுவின் இணைவு 50 நாட்கள் வரை நீடிக்க உள்ளதால் உடல் நல பிரச்னை, புதிய நோய் தொற்று, வேலை தொடர்பான சிக்கல்கள் என வாழ்க்கையில் பல அம்சங்களைப் பாதிக்கக்கூடியதாக இருக்கும்.