72 வயசு எல்லாம் என்ன 86 வயசிலும் நடித்த அரக்கன் சூப்பர் ஸ்டாரை மீண்டும் வம்பிழுக்கும் ப்ளூ சட்டை

0
394

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ரஜினியை பற்றி அந்த விழாவில் புகழ்ந்து பேசி இருந்தார்.

அதாவது 72 வயதாகியும் தயாரிப்பாளர்களின் விருப்பமான நடிகராக சூப்பர் ஸ்டாரால் மட்டுமே இருக்க முடியும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பலரும் இந்தியாவில் ஏன் ஆசியாவிலேயே ரஜினிகாந்த் மட்டும்தான் இந்த வயசிலும் கெத்தாக நடிக்க முடியும் என கூறி வந்தனர். இதற்கு ப்ளூ சட்டை மாறன் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

அதாவது சிலர் 72 வயதானாலும் தலைவர் இன்னும் கெத்தாக நடிக்கிறார், ஆசியாவிலேயே அவரால் மட்டும்தான் இப்படி எல்லாம் முடியும் என பருந்துக்குஞ்சு கூறுகிறது. இதுக்கெல்லாம் அவ்வளவு தூரம் போகணுமா தமிழ்நாட்டிலேயே ஒரு ஆள் இருக்கிறார் என ப்ளூ சட்டை கூறி உள்ளார்.

அதாவது தனது 86 வயது வரை தமிழ் சினிமாவில் பல்வேறு வேடங்களில் நடித்து அசத்திய ஒருவர் இருக்கிறார். அதுவும் நூற்றுக்கணக்கான படங்கள் கொடுத்த பெரும் கலைஞர் தான் அந்த நடிப்பு அரக்கன். அதாவது காக்கா ராதாகிருஷ்ணனை தான் ப்ளூ சட்டை ரஜினியுடன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.

மேலும் 1947 ஆம் ஆண்டு பைத்தியக்காரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி மனோகரா, துளி விஷம், மங்கையர்க்கரசி, கப்பலோட்டிய தமிழன், தேவர் மகன், மே மாதம், வியட்நாம் காலனி, மனதை திருடி விட்டாய், வசூல் ராஜா MBBS போன்ற பல படங்களை காக்கா ராதாகிருஷ்ணன் கொடுத்துள்ளதாக ப்ளூ சட்டை குறிப்பிட்டுள்ளார்.

காக்கா ராதாகிருஷ்ணன் ஒரு அருமையான நடிகர் என்பதை யாராலும் மறுக்க முடியாத ஒன்றுதான். ஆனால் 72 வயசிலும் ஹீரோவாக ஒரு படத்தை மொத்தமாக தாங்கி பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. எனவே ரஜினியை தவறாக பேச வேண்டாம் என ப்ளூ சட்டை மாறனுக்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.