ரஜினியை பார்த்து வளர்ந்து தற்போது எதிர்த்து நிற்கும் 5 ஹீரோக்கள்.. மாமனாரை ஓரம்கட்ட நினைக்கும் தனுஷ்

0
132

ஆரம்பத்தில் ரஜினியை கையை கட்டி சலாம் போட்ட நடிகர்கள் இப்பொழுது அவருக்கு போட்டியாக மாறிவிட்டனர்.

Super Star Rajinikanth: தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை 168 படங்களில் நடித்துள்ளார். படத்திற்கு படம் வெற்றிகளை குவித்து வசூலில் சாதனை படைத்து சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார். மேலும் அந்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை கடந்த 40 ஆண்டு காலமாக பாதுகாத்து வருகிறார். சினிமா மீது கொண்ட காதல் காரணமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ரஜினி. இவரைப் பின்பற்றி பல நடிகர்கள் தமிழ் திரைப்படங்களில் ஜெயித்துள்ளனர். ஆரம்பத்தில் கையை கட்டி சலாம் போட்ட நடிகர்கள் இப்பொழுது அவருக்கு போட்டியாக மாறிவிட்டனர். ஆனாலும் வித்தியாசமான படங்களை கொடுக்கும் இயக்குனர்களை தேர்ந்தெடுத்து தாமும் இந்த நடிகர்களுக்கு டஃப் கொடுக்கிறார் ரஜினி.

விஜய் : இளைய தளபதியாக உருவெடுத்து தளபதியாக மாறி ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய். அதன் பிறகு ரசிகன், தேவா, பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, குஷி, கில்லி, திருப்பாச்சி, தெறி, பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவரது வாரிசு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். ரஜினி ரசிகராக அவரை பின்பற்றி பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இன்று உச்ச நட்சத்திரமாக விஜய் ஜொலிக்கின்றார். இதைப் பார்த்து சிலர் விஜய் தான் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் : தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி பிரபலமடைந்து பின்னர் உச்ச நடிகராக வளர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள இவர் மெரினா படத்தின் மூலம் ஹீரோவானார். மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வி. வி. எஸ், மான்கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, டாக்டர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளார். நடிப்பையும் தாண்டி தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி, பாடலாசிரியராகவும் பன்முக திறமை மூலம் வெற்றி கொடி நாட்டி வருகிறார். சிவகார்த்திகேயன் ரஜினி தீவிர ரசிகர் என்பது நாம் அறிந்ததே. நல்ல படங்களையும் படத்தில் பணியாற்றிய படக்குழுவினரையும் பாராட்ட தவறாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படமும் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனுஷ் : தன்னுடைய முழு நடிப்புத் திறமையை வைத்து மட்டும் உயர்ந்த நடிகர் தான் தனுஷ். துள்ளுவதோ இளமை படம் மூலம் நடிகரான தனுஷ், காதல் கொண்டேன் படம் நல்ல பெயர் வாங்கி தந்தது. அதை தொடர்ந்து சுள்ளான், மாப்பிள்ளை, திருவிளையாடல் ஆரம்பம், திருடா திருடி, படிக்காதவன் , விஐபி 1, 2 அசுரன், கர்ணன் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து பெயர் பெற்றார். பாலிவுடில் ராஞ்சனா, அட்ராங்கி ரே ஆகிய படங்களில் நடித்திருந்தார். இவர் சூப்பர் ஸ்டார் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் நடித்த பல திரைப்படங்களை பார்வையிட்டு ரஜினி தானே தன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கிறார். பல திரைப்பட விருதுகளையும் குறிப்பாக அசுரன் படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார் நடிகர் தனுஷ்.

கார்த்தி : இயக்குனர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக கெரியரை தொடங்கிய கார்த்தி பருத்தி வீரன் படத்தின் மூலம் நடிகரானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற கார்த்தி அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி, சர்தார் உள்ளிட்ட பல படங்களைக் கொடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் முத்து படம் ஜப்பானில் வெளிவந்த போது அங்கு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதில் சில ரசிகர்கள் சென்னை வந்து தமிழ் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோல் ரஜினிக்கு பிறகு நடிகர் கார்த்திக்கு ஜப்பானிலிருந்து சென்னை வந்து அவருடைய பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்து சென்றுள்ளனர் ஜப்பான் ரசிகர்கள். இதன் மூலம் ரஜினிகாந்துக்கு பிறகு ‘வெளிநாட்டு ரசிகர்களை பெற்றுள்ள நடிகர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார் கார்த்தி.

R. J. பாலாஜி : R. J. பாலாஜி வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்களிடையே பிரபலமானவர். எதிர்நீச்சல், தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை இயக்கி நடிக்கவும் செய்துள்ளார். இப்படங்கள் நல்ல வரவேற்பை அவருக்கு பெற்று தந்தது. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வீட்டில் விசேஷம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். ஹிந்தி படமான படாய் ஹோ படத்தின் ரீமேக் தான் இத்திரைப்படம்.

இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. அதில் ரஜினியின் படையப்பா மற்றும் மன்னன் ஆகிய படங்களில் பெண்களை திமிராக காட்டி இருப்பார்கள். இதனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமூக வேற்றுமை உண்டாவதாக தெரிவித்து பேசி இருக்கிறார் ஆர். ஜே. பாலாஜி. பன்முக கலைஞரான பாலாஜி ரஜினியின் ரசிகர், அவரை பின்பற்றி ஜெயித்த நடிகர் என்றாலும் இன்று அவரையே பேசும் அளவிற்கு உயர்ந்த விட்டாரா என்ற சர்ச்சையை கிளம்பியுள்ளது.