சிங்கத்தை தாண்டி லியோவில் இடம்பெறும் விலங்கு.. லோகேஷை நம்பி பல கோடி செலவு செய்த லலித்

0
96

லியோ படத்தில் சிங்கத்தை தாண்டி மற்றொரு விலங்கு இடம்பெறுகிறது.

Movie Leo: விஜய்யின் தளபதி 67 படத்திற்கான டைட்டில் லியோ என்று வெளியான உடனே ரசிகர்களுக்கு சிங்கம் தான் ஞாபகம் வந்தது. ஆகையால் அப்போது லியோ படத்தில் சிங்கம் இடம்பெறும் என்பதை ரசிகர்கள் ஓரளவு கணித்து விட்டனர். இந்நிலையில் மற்றொரு விலங்கும் லியோவில் இடம்பெறுகிறதாம்.

பொதுவாக லோகேஷ் தனது படங்களில் வித்தியாசமான முயற்சிகளை கையாண்டு வருகிறார். அந்த வகையில் முதல்முறையாக லியோவில் விலங்குகளை பயன்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் யாரும் இதுவரை பயன்படுத்தாத விலங்கை வைத்து காட்சிகள் எடுத்துள்ளார்.

அதாவது குளிர் பிரதேசங்களில் வாழும் ஹைனா என்ற கழுதைப்புலிகள் லியோ படத்தில் இடம்பெறுகிறதாம். இந்த விலங்குகள் ஏற்கனவே பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் வெளியான டைகர் ஜிந்தா ஹை என்ற படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். புதுவித முயற்சியாக தமிழ் சினிமாவிலும் லோகேஷ் இந்த விலங்கை பயன்படுத்தி இருக்கிறார்.

மேலும் லியோ படத்தில் ஹைனா இடம்பெற்ற காட்சிகள் மட்டும் கிட்டத்தட்ட 10 கோடிக்கு மேல் செலவாகி இருக்கிறதாம். லோகேஷின் இந்த முயற்சியை நம்பி தயாரிப்பு நிறுவனர் லலித் இவ்வளவு கோடியில் செலவு செய்துள்ளார். பொதுவாக படங்களில் இடம்பெறும் விலங்குகள் பயிற்சி அளிக்கப்பட்ட விலங்குகளாக இருக்கும்.

ஆனால் ஹைனா போன்ற விலங்குகளுக்கு பயிற்சி அளிக்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும் இந்த செய்தி அறிந்த ரசிகர்கள் பெரிய திரையில் இந்த காட்சிகளை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். அதோடு மட்டுமின்றி லியோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஓநாயும் இடம்பெற்றிருந்தது.

காஷ்மீரில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதால் குளிர் பிரதேசத்தில் உள்ள விலங்குகளை லியோ படத்தில் அதிகம் காணலாம். இதனால் விஎஃப் எக்ஸ் வேலைகள் லியோ படத்திற்கு நிறைய இருக்கிறதாம். ஆகையால் அடுத்த மூன்று மாதங்கள் இதற்காக லோகேஷ் நேரத்தை செலவிட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.