போலீஸ் அதிகாரியாய் சூப்பர் ஸ்டார் கலக்கிய 5 படங்கள்.. 27 வருடத்திற்கு பிறகு ரஜினி ஏற்ற கதாபாத்திரம்

0
182

Actor Rajini: தன் எதார்த்தமான பேச்சாலும், நடிப்பாலும் மக்கள் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்தவர் நம் சூப்பர் ஸ்டார். இன்று வரை இளம் நடிகர்களுக்கு போட்டியாய் களம் இறங்கும் இவர் மேற்கொண்ட போலீஸ் கதாபாத்திரங்கள் படத்திற்கு சிறப்பு கூட்டக்கூடியவை.

அவ்வாறு எந்த கெட்டப் போட்டாலும் அதற்கு ஏற்றவாறு தன் நடிப்பினை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டவர் ரஜினி, படத்தில் இடம்பெற்றாலே போதும் என்ற அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இவருக்கு உண்டு. அவ்வாறு இன்று வரை மறக்க முடியாத 5 போலீஸ் கேரக்டர்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

கொடி பறக்குது: 1988ல் பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த படம் தான் கொடி பறக்குது. மேலும் 16 வயதினிலே படத்தில் கமலின் மூலம் கிடைத்த வெற்றியை கொண்டு, ரஜினியை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டு இப்படத்தில் ரஜினியை போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடிக்க வைத்திருப்பார். இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களே கிடைத்தாலும், வணிக ரீதியான வெற்றியை பெறவில்லை.

மூன்று முகம்: 1982ல் ஜெகநாதன் இயக்கத்தில் மூன்று மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் ரஜினி. இப்படம் மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று, பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளியது. மேலும் இப்படம் 175 நாள் திரையில் ஓடியது. அதிலும் குறிப்பாக போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினியின் நடிப்பு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.

அன்பிற்கு நான் அடிமை: 1980ல் தியாகராஜன் இயக்கத்தில் ரஜினி, சுருளிராஜன், விஜயன், சுஜாதா, ரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் திருடனாக இடம்பெற்று அதன் பின் போலி அதிகாரியாக மாறி நாகப்பனுக்கு குறி வைக்கும் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் ரஜினி.

நாட்டுக்கொரு நல்லவன்: 1991ல் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாய் களம் இறங்கி இருப்பார் ரஜினி. சட்டவிரோதமான கும்பலை வலை போட்டு பிடிக்கும் நடிப்பில் ரஜினி பெரிதும் பேசப்பட்டார். இருப்பினும் இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தோல்வியை தழுவியது.

தர்பார்: 2020ல் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மும்பை பகுதியில் நடக்கும் போதை பொருள் புழக்கத்தை அறவே அழிக்கும் நேர்மையான அதிகாரியாய் களம் இறங்கி இருப்பார் ரஜினி. இருப்பினும் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தந்தது.