சாதிய வெறியை தூண்டியதா தேவர் மகன்.. சாமர்த்தியமாக காய் நகர்த்திய இயக்குனருக்கு கமலின் சவுக்கடி

0
477

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் உடல் நலக்குறைவால் அல்லது வயது மூப்பு காரணமாக இறப்பதை அவர்களுடைய ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் வேடிக்கையாக சாவை தேடிக்கொண்ட இரண்டு பிரபலங்களை பற்றி தற்போது தெரியவந்துள்ளது. அதிலும் ஒரு நடிகர் 500 படங்களுக்கு மேல் 60 வயசு வரை தன்னுடைய பங்களிப்பை சினிமாவிற்கு கொடுத்தவர் என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

அதில் ஒருவர் தான் நவரச நாயகனான கார்த்திக் அவர்களின் தந்தை நவரச திலகம் முத்துராமன். இவர் 60 மற்றும் 70-களில் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் ரவுண்டு கட்டி நடித்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் முத்துராமன், பெரும்பாலும் அக்காலத்திய முன்னணி இயக்குனரான ஸ்ரீதர், கே பாலச்சந்தர் ஆகியவர்களின் படங்களில் பெரும்பாலும் இவரைப் பார்க்க முடியும்.

இவருடைய நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படங்கள் ஆன பஞ்சவர்ணக்கிளி, வானம்பாடி, போலீஸ்காரன் மகள், காதலிக்க நேரமில்லை, மயங்குகிறாள் ஒரு மாது என பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி சினிமாவில் ஜாம்பவானாக இருந்த நடிகர் முத்துராமன் அவர்கள் கீழே விழுந்து விபத்தில் இறக்க வில்லை. அவர் கடுங்குளிரில் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்ததில் தட்பவெப்பநிலை காரணமாக இறந்தார். அவர் மூச்சு திணறிக்கொண்டிருக்கும்போது அருகில் முதலுதவி செய்ய ஆளில்லாததால் இறந்தார்.

அடுத்ததாக வி.கே.ராமசாமி அவர்கள் தமிழ் சினிமாவில் 1950 முதல் 1990 வரை சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர். எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி என டாப் நடிகர்களின் படங்களில் வலுவான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி நடித்து படங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இவருடைய தனித்துவமான பேச்சால் நகைச்சுவை வேடங்களிலும், எதிர்மறை கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்க முடிந்தது.

இவர் சுமார் 15 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்திருக்கிறார். கடைசியாக இவர் நடித்த படம் மாதவனின் டும் டும் டும். இவருடைய மறைவு செய்தி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இவர் எப்படி மரணித்தார் என்ற ரகசியம் தற்போது வெளிப்பட்டுள்ளது. வி.கே. ராமசாமி அவர்கள் உடல் உபாதைகள் ஏதும் இல்லாத நிலையில் உடல் சுறு சுறுப்படையவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி இருந்தார்.

மருத்துவம் முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நாளில் மின்சாரம் தடைப்பட்டதால் இருட்டில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக இறந்தார். இவ்வாறு இந்த இரண்டு நடிகர்களும் இறந்தது தெரியும். ஆனால் இப்படி இறந்திருப்பார்கள் என்ற செய்தி தற்போது வெளிவந்து பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.