ஒரு மாசமாக திட்டம் போட்ட தளபதி.. துளிகூட கை கொடுக்காத SAC குடும்பம்

0
326

விஜய்யின் லியோ படத்தை விட இப்போது அவர் துவங்கி இருக்கும் அரசியல் பயணத்தை குறித்து தான் சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. அதிலும் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என முதலில் விருப்பப்பட்டவர் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தான்.

ஆனால் விஜய்யை கேட்காமலேயே ஒரு சில முடிவை எடுத்ததால் இவர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. அப்போது பிரிந்தவர்கள் தான் இப்போது வரை ஒட்டாமல் இருக்கின்றனர். அதிலும் விஜய் தன்னுடைய தந்தை எஸ்ஏசிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை தான் முன்னிலைப் படுத்துகிறார்.

இதனால் எஸ்ஏசி வெறியேறி இருக்கிறார். இதற்கெல்லாம் பழிவாங்கும் விதமாகத்தான் இப்போது எஸ்ஏசி, கடந்த 19ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்காக விஜய் ஏற்பாடு செய்த பாராட்டு விழாவை குறித்து எந்தவித கருத்தோ அல்லது பாராட்டோ தெரிவிக்காமல் சைலன்டாக இருக்கிறார்.

234 தொகுதியில் இருக்கும் மாணவ மாணவிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்தவர்களுக்கு விஜய் தன்னுடைய இயக்கத்தின் சார்பாக ஊக்க தொகை வழங்கினார். இந்த விழாவிற்காகவே லியோ படத்தில் தன் போர்ஷனை கொஞ்சம் சீக்கிரமாக முடித்துக் கொடுத்து விட்டார்.

கடந்த 10 நாட்களாக விழா நடக்கும் இடத்திற்கு தினமும் வந்து பார்த்துவிட்டு செல்வாராம். எப்படி எல்லாத்தையும் ஆர்கனைஸ் பண்ணலாம் என ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்தாராம். ஒருத்தரும் சாப்பிடாமல் போய்விட கூடாது என்பது அவரது எண்ணம்.

இவ்வளவு கஷ்டப்பட்ட விஜய்க்கு தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா சந்திரசேகர் தரப்பிலிருந்து எந்த ஒரு பாராட்டும் சப்போர்ட்டும் கிடைக்கவில்லை. ஆனால் முன்னணி கட்சிகள் இவருடன் கூட்டணி போடுவதற்காக மும்முரம் காட்டுகின்றனர். ஆனால் அவருடைய குடும்பம் துளி கூட கண்டுகொள்ளவில்லை என்பதுதான் மர்மம்.